மீன் அமிலத்தை எப்படி பயன்படுத்துவது?

மீன் அமிலத்தை காலை அல்லது மாலை வேளையில் பயிரின் பூ மற்றும் காய் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் அல்லது தண்ணீர் பாயும் பொழுது தண்ணீருக்கு தண்ணீருடன் கலந்துவிடலாம்.

மண்புழு உரத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது?

மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருட்களை பொருத்தே அமைகிறது.

மண்புழு உரத்தில் 15 முதல் 20 சதவீதம் கார்பன் o.5-2 சதவீதம் தழைச்சத்து o.1-o.5 சதவீதம் மணிச்சத்து o.5-1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.

மேலும் இரும்பு துத்தநாகம் சோடியம் கால்சியம் மாங்கனீசு சத்துக்களுடன்ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின் ஆக்சன் போன்ற பயிர் வகைகளும் இருக்கின்றன.

நம் விதைகளை காய வைக்கும் போது எதை பின்பற்ற வேண்டும்?

சூரிய ஒளியில் விதைகளை காய வைக்கும் போது சுத்தமான தரையில் ஒரே வகையான விதைகள் மட்டுமே காயவைக்கவேண்டும்.

அதிகம் வெயிலில் விதைகளை காய வைத்ததை தவிர்க்க வேண்டும்

மேலும் காய வைத்த விதைகளை அதிக வெயில் உள்ள சூழ்நிலையில் குவித்து தார்பாய் போட்டு மூடிவிடவேண்டும். அத்தோடு விதைகளை அதிகமாகும் காய வைப்பதால் விதை உரைவெடித்து முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

நச்சுத்தன்மை கொண்ட காளான்களை எப்படி கண்டறியலாம்?

காளான் என்பது பூஞ்சாண வகைகளில் சேர்ந்த பச்சையம் இல்லாத கீழ்நிலை தாவரமாகும் காளானில் நல்ல காளான் மற்றும் நச்சுகாளான் என இரு வகை உள்ளது.

அவற்றில் காலங்களில் உருவ அமைப்பு வெட்டும்போது நிறமாற்றம் அடைதல் விரும்பத்தகாத மணம் பாலுடன் கலக்கும்போது திடப்பொருள் நீரும் தனித்தன்மை பிரிதல் போன்றவற்றால் நொச்சிகாளான்களை கண்டறியலாம்.

கால்நடைகளுக்கு ரத்தம் கலந்த சிறுநீர் பிரிந்தால் என்ன வைத்தியம் செய்யலாம்?

ரத்தம் கலந்த சிறுநீர் பிரிந்தால் வில்வ இலை 2oo கிராம் பழைய புளி 200 கிராம் சின்னவெங்காயம் 300 கிராம் ஆகிய மூன்றையும் நல்லெண்ணெய் 100 மில்லிசேர்த்தல் நன்றாக அரைக்க வேண்டும்.

இவற்றில் ஒரு லிட்டர் நீராகார தண்ணீரில் நன்கு கலக்கி மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories