வீட்டுச் செடிகளுக்கு அற்புத உரமாக மாறும் கெட்டுப்போன பால்!

கெட்டுப்போன பால் மனித உடலுக்கு நல்லது கிடையாது. ஆனால் அவை நமது தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு உரமாக (Compost) செயல்படுகின்றன. அதோடு அவை பூஞ்சை, காளான் மற்றும் பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டுள்ளதால் செடிகளுக்கு நல்ல உரமாக செயல்படும். ஆதலால், இனி கெட்டுப்போன பாலை நினைத்து கவலை கொள்ளத் தேவையில்லை என்றார்.

செடிகளுக்கு உரம்:
காலாவதியான பாலை (expired milk) கீழே கொட்ட வேண்டாம். இலைகளுக்கு பஞ்சின் மூலம் பாலை கொடுத்தால், அவை பிரகாசிப்பதைப் பார்க்க முடியும். கெட்டுப்போன பால் பூஞ்சை காளான் மற்றும் பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டிருப்பது தான் உரமாக செயல்படுவதற்கான காரணம். தி ஸ்புரூஸ் இணைய பக்கத்தின் (Thespruce.com) கூற்றுப்படி, பாலில் உள்ள கால்சியம் தாவரங்கள் வளர உதவுகிறது என்றும், மலரின் இறுதி அழுகலைத் தடுக்கிறது என்றும் கூறுகிறது. இது பொதுவாக தக்காளி, மிளகு மற்றும் ஸ்குவாஷ் போன்ற செடிகளில் கால்சியம் (Calcium) குறைபாடு காரணமாக காணப்படுகிறது, எனவும் கூறியுள்ளது. பாலில் அத்தியாவசிய புரதங்கள் (Proteins) மற்றும் வைட்டமின் பி (Vitamin B) ஆகியவை உள்ளன. அவை தாவரங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்குகின்றன. எவ்வாறாயினும், அதிகப்படியான பாலைப் பயன்படுத்துவதை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு பாலில் உள்ள பாக்டீரியாக்கள் (Bacteria) வளர்ச்சியைத் தடுக்கலாம் என்றார்.

தாவரங்களில் பாலை பயன்படுத்தும் முறை:
ஒழுங்காக நீர்த்துப்போகும் வரை நீங்கள் எந்த வகை பாலையும் பயன்படுத்தலாம். பாலை தண்ணீரில் கலந்து திரவத்தை, ஒரு ஸ்ப்ரே பாட்டில் மாற்றவும். தாவரங்களின் இலைகளில் (Leaf’s) அந்த கலவையை தெளிக்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சரிபார்க்க வேண்டும். தண்ணீர் பால் அனைத்தும் உறிஞ்சப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இலைகளில் இன்னும் கொஞ்சம் திரவம் இருந்தால், அதை ஈரமான துணியால் துடைக்க வேண்டும். இல்லையேல் அது பூஞ்சை எதிர்வினைக்கு வழிவகுப்பதாக அமைகிறது என்று
கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories