விவசாயத்தில் பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டை கரைசல் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது .அத்தகைய வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை பற்றி இங்கு காணலாம்.
விவசாயத்தில் வேப்பங்கொட்டைக்கு முக்கிய சிறப்பு உள்ளது. இதனால் பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படும் .இந்த மாதத்தில் வேப்பமரம் பழம் வைக்கும். அதை சேகரித்து வைத்து வேப்பங்கொட்டையை விற்பனை செய்து லாபம் பெறலாம்.
வேப்ப எண்ணையை பயன்படுத்துவதை விட வேப்ப முத்துக்களை சேகரித்து அதை எடுத்து பயன்படுத்துவது தான் சிறந்தது. இதனால் வே ப்பம் கொ ட்டையில் உள்ள 18 வகையான ஆல்கலாய்டுகளும் முழுமையாக கிடைக்கும். இருப்பினும் மரச் செக்கில் ஆட்டிய வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
வேம்பின் வாசனையும் பூச்சிகளை விரட்டும். வேம்பின் கசப்புத் சுவையால் பூச்சிகள் பயிரை சாப்பிடாது கசப்பு சுவையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது தொடர்ந்து உண்ணும் பொழுது பூச்சிகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவை இறந்து விடுகிறது. இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலையை அடைகின்றன. பெண் பூச்சிகளின் முட்டை உற்பத்தியும் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிறது.
பூச்சிகளை கட்டுப்படுத்துவதுதால் பூச்சிகள் மூலம் பரவும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துகிறது. வேப்பங்கொட்டை கரைசல் அடித்த பயிரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் முளைத்து வர இயலாது.
வேப்பங்கொட்டை 5 கிலோ, நாட்டு ரக பூண்டும் 500 கிராம் ஆகியவற்றை எடுத்து இரண்டையும் தனித்தனியே ஆட்டுக்கல்லில் ஆட்டி பசைபோல் செய்து கொள்ள வேண்டும் இதை பழைய பருத்தித் துணியில் கட்டி 10 லிட்டர் கோமியத்தில் ஊற விடவேண்டும் வேப்பங்கொட்டை சாறு சிறிது சிறிதாக கரைந்து கோமியத்தில் கலக்கும். இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் வேம்பின் சத்து கோமியத்துடன் ஊ றிவிடும் இந்த சாற்றை வடிகட்டி அதனுடன் 100 கிராம் காதி சோப்பை கலந்தால் வேப்பங்கொட்டை கரைசல் தயாராகிவிடும்.
இந்த கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
வேப்பங்கொட்டை கரைசல் மாலையில் 3.30 மணிக்கு மேல் அடிக்கும்போது அதன் ஆல்கலாயிடுகள் நன்கு ஒட்டிக் கொள்கிறது காலையில் கரைசலைத் தெளித்தால் கரைசலில் உள்ள ஆல்கலாய்டுகள் சூரிய ஒளியினால் அழிந்து விடுகின்றது இதனால் வேப்பங்கொட்டை கரைசல் அதற்கான பலன் இல்லாமல் போகும்.