இன்றைய விவசாய பழமொழி

“களை பிடுங்காப் பயிர் கால் பயிர்”

விவசாயத்தின் முழுமை என்பது அனைத்துவித பராமரிப்புகளை நிறைவேறுகிறது விவசாயத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை அதாவது விதைப்பு, நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களை மேலாண்மை ,பூச்சி மேலாண்மை மற்றும் அறுவடை போன்றவற்றை நிறைவு செய்வதே விவசாயத்தின் முழுமை என அறியப்படுகிறது .இன்றைக்கு களை மேலாண்மையின் சிறப்பினை இங்கு காணலாம்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அறிவுநிதி. இவர் இயற்கை விவசாயம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு இயற்கை முறையில் எவ்வாறு அதிக மகசூல் பெறுவது என அறிய வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

இதை யாரிடம் அறியலாம் என்ற நோக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த அனுபவம் நிறைந்த விவசாயியான ராதாகிருஷ்ணன் என்ற அய்யாவை சந்தித்தார். அவரைக் கண்ட அறிவுநிதி அய்யா உங்களைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி .எனக்கு விவசாயத்தின் முழுமையை குறித்து அறிய வேண்டி ஆவல் அதிகம் இருக்கிறது .என்னால் எந்த விவசாயத்திலும் நல்ல விளைச்சலைப் பெற முடிவதில்லை. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் என்றார்.

சரி சொல்கிறேன் என்றார். வயலில் என்ன பயிர் செய்து உள்ளீர் என்று கேட்க… அறிவுநிதி இயற்கை முறையில் கடலை பயிர் செய்துள்ளேன் என்றார்.

சரி… பயிர்செய்து எத்தனை நாட்கள் ஆகின்றது. களை எடுத்தாச்சா என்று கேட்டார் மூத்த விவசாயி. 30 நாட்கள் ஆகுது. இன்னமும் களை எடுக்கவில்லை என அறிவுநிதி கூறினார்.

அதற்கு மூத்த விவசாயியான ராதாகிருஷ்ணன் அட… “களை பிடுங்காப் பயிர் கால் பயிர்” என்றார்.

விவசாயம் செய்தால் மட்டும் போதாது முறையான பராமரிப்பும் தேவை. குறிப்பிட்ட இடைவெளியில் எப்படி நீர்ப்பாசனம் செய்கிறோமோ அப்படியே கலை மேலாண்மையும் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் நிலக்கடலையை விதைத்து பத்து நாள் முதல் 15 நாட்களுக்குள் களை எடுத்து விட வேண்டும். பிறகு பூக்கும் தருணம் ஆன 40 முதல் 50 நாட்களுக்குள் இரண்டாவது களை எடுத்து மண் அணைக்க வேண்டும். மண் அணைப்பதன் மூலம் அதிகமான கடலைகள் கிடைக்கும். இதுஎல்லா பயிர்களுக்கும் பொருந்தும்.

கலை எடுக்காமல் வெறுமே நீர்ப்பாசனம் செய்யக்கூடாது. உரமிட்டால் கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் பயிர் எடுத்துக் கொள்கிறதோ இல்லையோ முதலில் கலைகள் எடுத்துக் கொண்டு நன்கு வளரும் இதனை தவிர்க்க களையெடுத்தல் மிக முக்கியமான அவசியம்.

கலை மேலாண்மையை மேற்கொள்ளவில்லை என்றால் மகசூல் கால்பகுதி மட்டுமே கிடைக்கும். அதாவது சிறிய அளவில் மட்டுமே கிடைக்கும் என்பதனை வெளிப்படுத்தும் நோக்கிலேயே நம் முன்னோர்கள் “களை பிடுங்காப் பயிர் கால் பயிர்” என்ற பழமொழியை கூறினார்கள்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories