இன்றைய விவசாய பழமொழி!

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

விவசாயத்திற்கு முக்கியமானது நீர்தான். அதை எப்படி நிலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இங்கு காணலாம்.

அழகேசனுக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் .அவர் தனது தந்தையுடன் வயலுக்குச் சென்று இருந்தார் அப்போது அவர் தந்தையிடம் நன்செய் நிலம் என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்.

அதற்கு அவரது தந்தையே நன்செய் நிலம் என்றால்( நன்மைசெய்யும் நிலம்) நல்ல நீர் மற்றும் மண் வளம் மிக்க நிலம்.

பொதுவாக ஆற்றுப்படுகைகளில் குல ஏரிகளில் காணப்படும் நிலத்தை நன்செய் நிலம் என்று சொல்லலாம். இந்த நிலம் நல்ல செழிப்பான பயிர் வளர்ச்சியை நித்தமும் தரும் வல்லமை மிக்க தன்மை கொண்டது என்றார்.

அதில் என்ன பயிர் செய்யலாம் என்றார் அழகேசன். அதற்கு அவர் தந்தையை நன்செய் நிலத்தில் முதன்மையானது நெல் மட்டும் தான் என்றார்.

அப்போ நெல் முழுவதும் தண்ணீரிலேயே தான் வளரும? நீர் இருந்தால்எ ப்படி அறுவடை செய்யவேண்டும் என்று கேட்டார் அழகேசன்.

அதற்கு தந்தை பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் போது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அதில் மிக முக்கியமான நெல் பயிர்களுக்கு எப்போதும் காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் என்றார்.

அதாவது தண்ணீர் பாய்ச்சிய நிலம் நன்றாக காய்ந்த பிறகு மீண்டும் தண்ணீர் விட வேண்டும் என்று அவரது தந்தை கூறினார்

நெல்லுக்கு மட்டுமா அப்படி?என்றார்

அதற்கு அவரது தந்தை எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சும்போது சில நல்ல விஷயங்களை கவனிக்க வேண்டும் நிலத்திலேயே தன்மை இருக்கிறதா என அறிந்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் ஏனென்றால் நிலத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் பூஞ்சை உற்பத்தியாகும்.

நெல் வயலுக்கு தண்ணீர் தேங்குவதை தவிர்க்க காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். இதனால் 30 முதல் 40 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

நெற்பயிருக்கு மிகமுக்கியமாக தூர் பிடிக்கும் பருவம் பூக்கும் பருவம் கதிர் உருவாகும் பருவம் பால் பிடிக்கும் பருவம் போதுமான அளவு நீர் பாய்ச்சவேண்டும் .அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும் என்றார்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories