இன்றைய விவசாய பழமொழி!

“தாய்முகம் காணாத பிள்ளையும் மழைமுகம் காணாத நிலமும் செழிக்காது”

விவசாயத்திற்கு மிக முக்கியமானது தண்ணீர்.. தண்ணீர் தேவைக்கு மிக முக்கியமான மழையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் இன்றைய விவசாய பழமொழியை இங்கு காணலாம்.

சூர்யா விவசாயி ஒருவரின் மகன். ஒரு முறை சூர்யா விவசாயத்திற்கு மழை எவ்வளவு முக்கியம் என்பதனை அறியவேண்டும் என்று தனது தந்தையிடம் மழையின் சிறப்பை எனக்கு கொஞ்சம் தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள் அப்பா என்றான்.

அதற்கு அவனது தந்தை விவசாயத்திற்கு மழை மிகவும் இன்றியமையாதது.. அதைத் தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு போன்ற சொல்லலாம்.. இதைத் தெளிவுபடுத்தும் வகையில் நமது முன்னோர்கள் “தாய்முகம் காணாத பிள்ளையும் மழைமுகம் காணாத நிலமும் செழிக்காது” என்று கூறியுள்ளார்கள்.

பிறகு அவர் தெளிவாகக் கூறுகிறேன் கேள் என்றார்.. ஒரு குழந்தைக்கு தாய் இல்லை என்றால் அந்த குழந்தைக்கு மற்ற எத்தனை உறவுகள் இருந்தாலும் அவர்களால் அந்த குழந்தையை முறையாக வளர்க்க முடியாது அந்த குழந்தையின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்காது அதைப்போலத்தான் விவசாயத்திற்கு மிக முக்கியமான மழை இல்லை என்றால் பயிர்கள் மற்றும் நிலம் செழிக்காது…

அத்தகைய மழையில் அடைமழை, கன மழை ,ஆலங்கட்டி மழை ,பனி மழை,ஆழி மழை என வகைகள் உண்டு..

அடைமழை ,கன மழையை பெரிதும் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதில் அடை மழையானது ஐப்பசி மாதம் பெய்யும் கனமழை யானது கார்த்திகை மாதம் பெய்யும். அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தால் அதை அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுவது வழக்கத்தில் உள்ளது.

மேலும் பெரிய துளிகள் கொண்ட மழையை தான் கனமழை என்று கூறுகிறார்கள்.

ஆலங்கட்டி மழை என்பது பனிக்கட்டிகள் மழையுடன் அல்லது தனியாகவோ வானில் இருந்தும் உருண்டு விழும், இது பனி மழை என்று அழைக்கப்படுகிறது

ஆழி என்றால் கடல் என்று சொல்வார்கள் அந்த வகையில் கடலில் பொழியும் இடைவிடாத மா மழைக்கு தான் ஆழிமழை என்று பெயர்.

மழைக்கு இவ்வளவு சிறப்புகள் உள்ளது ஆனால் இத்தகைய மழை சரியான நேரத்தில் சரியான நிலையில் சரியான பருவ நிலையில் பெய்தால்விவசாயத்திற்கு நல்ல பலன் உள்ளது. இத்தகைய மழையின் சிறப்பை உணர்த்தவே” தாய்முகம் காணாத பிள்ளையும் மழைமுகம் காணாத நிலமும் செழிக்காது” என்ற பழமொழியை நமது முன்னோர்கள் கூறுகிறார்கள் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories