இன்றைய விவசாய பழமொழி!

“உடையவன் பாராத பயிர் உருப்படாது”

விவசாயம் சம்பந்தப்பட்ட பல பழமொழிகளை நாம் பார்த்து வருகிறோம் அந்த வகையில் சிலவற்றை எடுத்துக் காட்டும் வகையில் ஒரு பழமொழி விளக்கத்தை இங்கு காணலாம்.

சேகர் ஒரு மூத்த விவசாயி. அவர் வயது முதிர்ந்தவர் காரணமாக விவசாயம் செய்யாமல் நிலத்தை அப்படியே விட்டுவிட்டார்.

அவரது மனைவியோ நீங்கள் விவசாயம் செய்தபோது இருந்தது போல நமது நிலம் இல்லை. இப்பொழுது அதிக களை களுடன் சுத்தமாக இல்லை என்றார். அதற்கு அவரது கணவர் சேகர் “உடையவன் பாராத பயிர் உருப்படாது” என்று சும்மாவா சொன்னார்கள் என்றார்.

அதைக் கேட்ட அவரது மனைவியை நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்றார் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அவர்களது பேத்தி என்ன பாட்டி நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்று கேட்டார்.

அதற்கு அவளது பாட்டியும் விவசாயம் செய்த நிலத்தை பற்றி தான் என்றார். அதற்கு அவர் பேத்தி புரியும்படி சொல்லுங்க பாட்டி என்றாள்.

அதற்கு பாட்டி உன்னுடைய தாத்தா விவசாயம் செய்யும் பொழுது நிலத்தில் ஒரு களை செடிகள் கூட பார்க்க முடியாது. வாய்க்கால் வரப்பு என வயலின் அனைத்துப் பகுதிகளும் மிக நேர்த்தியாக வைத்திருப்பார்.

அதை வைத்து அவர் விவசாயத்தை எவ்வளவு ஆர்வமுடனும் முழு மனதுடனும் செய்கிறார் என்பதை நாம் அறிய முடியும். ஆனால் இப்பொழுது நமது நிலம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது இதற்கு தான் உ ன் தாத்தா “உடையவன் பாராத பயிர் உருப்படாது” என்ற பழமொழியை கூறினார்.

விவசாயம் மட்டுமல்ல மற்ற எந்த செயலாக இருந்தாலும் அவரவர் காரியம் எதுவானாலும் அதை முழு மனதுடனும் மனப்பூர்வமாக செய்வார்கள் …அதனால் நல்ல பலன் கிடைக்கும் .அவ்வாறு செய்யவில்லை எனில் பலன் ஏதும் கிடைக்காது.

அதே போலத்தான் நமது விவசாய நிலம் உள்ளது இதை நமது முன்னோர்கள்”உடையவன் பாராத பயிர் உருப்படாது” என்று கூறியுள்ளார்கள்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories