” கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்”
நாம் விவசாயத்தில் பல பயிர்களை சாகுபடி செய்தாலும் அதில் பூச்சி மேலாண்மை ஒரு அங்கமாக இருந்து வருகிறது ஆனால் ஒரு சில பயிர்களுக்கு இது அவசியமில்லாத ஒன்றாகிவிடுகிறது அதை உணர்த்தும் வகையில் இன்றைய வேளாண்மை பழமொழியை பார்க்கலாம்.
கர்ணனுக்கு அரை ஏக்கர் தரிசு நிலம் இருந்தது அதில் என்ன பயிரிடலாம் என அனுபவசாலி கண்ணனிடம் கேட்டபோது அவர் தரிசு நிலத்தில் கற்றாழை பயிரிடலாம் என்றார்.
அதைக் கேட்டதும் எனக்கு கொஞ்சம் பயிரிடும் முறை பற்றி தெளிவாக சொல்கிறீர்களா என்றார்.
அதற்கு நான் சொன்னது போல சோற்று கற்றாழை ஒரு தரிசு நில பயிராகும் மழை குறைவான பகுதியில் மூலிகை சோற்றுக் கற்றாழை பயிரிடலாம்.
கர்ணன் அதற்கு கன்றுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு கண்ணன் தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு வயதுடைய பக்கக் கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும் ஒரே அளவுள்ள கன்றுகளை தேர்ந்தெடுத்தல் முக்கியம் இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும் என்றார்
கற்றாழையை எந்த மாதத்தில் நடவு செய்யலாம் என்று கண்ணன் கேட்டான்.
அதற்கு கண்ணன் கற்றாழையை தனிப்பயிராக பயிரிடும்போது ஏக்கருக்கு 1,000 கன்றுகள் தேவைப்படும் பயிர் வருடத்திற்கு இரண்டு பருவங்களில் பயிரிடலாம் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம் என்றார்.
நடவு செய்யும் முன் என்ன உரம் இ டலாம் என்று கேட்டார் கண்ணன் அதற்கு நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 5 டன் தொழு உரம் இட்டு சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும் செடிகள் செழிப்பாக வளர்வதற்கு செடிகளுக்கிடையே 3 அடி இடைவெளி விட்டு நடவேண்டும்.
இதில் பூச்சிவிரட்டி என்ன பயன்படுத்த வேண்டும் என்று கேட்டார் “கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்” அதற்கு காரணம் கூறுமாறு கேட்டார்.
அதற்கு கண்ணன் தானாகவே வளர்ந்து கள்ளி செடி முற்களுடன் காணப்படும் எனவே அதற்கு முள் வேலி போடுதல் அவசியம் அல்ல அதுபோல கற்றாழையில் அதிக பூச்சித் தாக்குதல் நோய்கள் தோன்றுவதில்லை அதனால் பூச்சி விரடி தேவைப்படாத தேவைப்படாது என்றார்.
எந்த நோயும் வராது என்றார்
அதற்கு கண்ணன் நோய் என்று பார்த்தால் நீர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும் இதற்கு நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் இலைகள் முற்றும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும் இதனால் இலையில் தரமான கூழ் கிடைக்கும் நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்றார்.
எனவே தரிசு நிலத்தில் பூச்சி தாக்குதல் எதுவும் இல்லாத கற்றாழையை பயிரிடலாம் என்றார்.