“கார்த்திகை பின் மழையும் இல்லை கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை”
விவசாயத்திற்கு மழை இன்றியமையாதது. அப்படிப்பட்ட மழையை சில மாதங்களுக்குப் பிறகு பார்க்க முடியாது அந்த வகையில் மழையின் சிறப்பினை உணர்த்தும் இந்த பழமொழியை பார்க்கலாம்.
ஆபிரகாம் ஊர் திருநெல்வேலி அவரது மகன் சென்னையில் படித்துக்கொண்டிருந்தார் ஒருநாள் விடுமுறையின்போது உயிருக்கு வந்திருந்தார் அப்போது மழைக்காலம் முடிந்து விட்டதா என்றார்.
அதற்க்கு அவரது தந்தை இந்த வருடம் மழைதான் முடிந்துவிட்டதே என்றார்.
அதற்கு அவரது மகன் என்ன சொல்றீங்க என்று கேட்டான்
அதற்கு ஆபிரகாம் “கார்த்திகை பின் மழையும் இல்லை கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை” என்ற பழமொழியை சொன்னார்.
அதற்கு அவன் எனக்கு புரியும்படி சொல்லுங்கள் என்றான்.
அதற்கு ஆபிரகாம் சித்திரை ஆடி ஆவணி மாதங்களில் லேசான தூறல் விழும் புரட்டாசியில் பெருமழையும் ஐப்பசியில் அடைமழை கார்த்திகையில் கனமழையும் பெய்யும் அதற்கு பின் விவசாயத்திற்கு ஏற்ற மழை பெய்யாது அதனால்தான் “கார்த்திகை பின் மழையும் இல்லை “என்ற வரியின் மூலம் கார்த்திகை மழையின் சிறப்பை கூறுகின்றார் ஏனென்றால் மற்ற மாதங்களில் பெய்யும் மழையை விட கார்த்திகை மாதத்தில் மழை அதிகமாகப் பெய்யும் இதனால் நிலம் செழிக்கும் என்றார்.
ஏ ன் அப்பா கார்த்திகை மாதத்தின் பின் மழை பெய்யாது என்று கேட்டான்.
கார்த்திகை மாதம் மழைக்காலம் நிறைவு பெற்று குளிர்காலம் தொடங்கி விடும் அதைத்தான் அப்படி சொல்வார்கள் என்றார் .
மழைக்கு மட்டுமல்ல நம்முடைய சிறு சிறு செயல்களை கூட நம் முன்னோர்கள் பழமொழியாக சித்தரித்து ஒரே வரியில் மிக எளிமையாக கூறி இருக்கிறார்கள் என்றார்.