இயற்கை விவசாயத்திற்கு ஆலோசனைகள்!

இயற்கை விவசாயத்திற்கு ஆலோசனைகள்!

தாழ்வான பகுதியில் உள்ள வயல் வெளிகளில் இயற்கை வேளாண்மை செய்தது என்றால்வயலை சுற்றி கைகளை உயர்த்தி அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் மழைக்காலங்களில் மட்டும் வயல்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் மழைநீரில் வருவது தடுக்கப்படும்.

இயற்கை விவசாயத்திற்கு இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தும் முன்பு இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாலிதீன் பேப்பர்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருவது வேண்டும். அப்பொழுது தான் மண்ணில் மலட்டுத்தன்மை முதலில் சரியாகும்.

விதைகளில் முதற் காலத்தில் பயன்படுத்திய நாட்டு ரகங்களை பயன்படுத்துதல் நல்லது.

அதிக பொருட்செலவில் இடுபொருட்களை எட்டு அதிக மகசூல் என்பதை விட குறைந்த செலவில் ஆரோக்கியமான இடுபொருட்கள் இட்டு சராசரியான மகசூல் என்ற இலாப நோக்கத்தை பின்பற்ற வேண்டும்.

தண்ணீர் மற்றும் மின்பற்றாக்குறையை சிரமங்களை கருத்தில் கொண்டு தெளிப்புநீர் ,சொட்டு நீர் மற்றும் மரங்களுக்கு பானையில் திரி யிடும் முறை போன்றவைகளை பயன்படுத்தலாம்.

களைகளை நீக்க மூடாக்குமுறைகளை பயன்படுத்தலாம்.

இயற்கை முறையில் பூச்சிக்கொல்லிகள் நல்லது. பூச்சி விரட்டிகளை நாமே தயாரித்தால் வேண்டும்.

உப தொழிலாக விவசாயத்தை உற்ற நண்பர்களான கால்நடைகள் வளர்க்க வேண்டும். அதிலும் நாட்டு ரகங்களை தேர்வு செய்தல் மிகவும் நல்லது.

பயிர் சுழற்சி முறைகள் மற்றும் காலத்திற்கேற்ப பயிர்களை தேர்வு செய்தல் வேண்டும்.

பசுந்தாள் உரங்களை பூக்கள் வரும் முன்பு மடக்கி உழவு செய்து பயன்படுத்த வேண்டும்.

வருடம் முழுவதும் பயிர் செய்தலை தவிர்த்துகோடையில் ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மண்ணை ஆற விட வேண்டும்.

கோடை காலங்களில் அறுவடை முடிந்த வயல்களில் கால்நடைகளை கிடைகள் இட்டு மண்ணின் தரத்தை உயர்த்த வேண்டும்.

மழைநீர் தேங்கும் வகையில் கடைசி உழ வை குறுக்கு வாக்கில் உண்ணுதல் வேண்டும் .அப்பொழுதுதான் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.

கரும்பு போன்ற பயிர்களை அறுவடை செய்த பிறகு சறுக்கிற்க்கு தீயிடாமல் மக்க வைக்க வேண்டும்.

இதனால் மண்ணிற்கு ஊட்டம் மற்றும் ஈரப்பதம் சேமிப்பு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

கிணறு மற்றும் மின்கம்பங்கள் அருகில் நீண்ட கால வயதுடைய மரக்கன்றுகள் நடுவதை தவிர்க்க வேண்டும்.

வயலுக்கு நீர் பாய்ச்சும் போது அதிகமாக தேக்கி வைத்தல் கூடாது .இதனால் பயிர்களின் வேர் சுவாசம் தடைப்பட்டு வளர்ச்சி குறையும்.

பயிர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு நடவு செய்ய வேண்டும் .இதனால் போதிய சூரிய ஒளி கிடைப்பதுடன் அதிக மகசூலும் கிடைக்கும்.

பார் அமைக்கும்போது வடிகால் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாழை பருத்தி பப்பாளி போன்ற பயிர்களையும் அப்புறப்படுத்த நிலத்திலேயே மடக்கி உழுதல் வேண்டும்.

விவசாய நிலத்தில் தேவையற்ற பொருட்களை தீயிட்டு ஏறி கக்கூடாது இதனால் அங்குள்ள மண்புழுக்கள் இறக்க நேரிடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories