எந்த செயலிலும் ஆரம்பம் சிறப்பாக இருந்தால்தான் அந்த செயலை முழுமையாக நிறைவடையும் அந்த வகையில் விவசாயத்தில் முக்கிய வேலையான உழ வு பணியும் பற்றி பழமொழிகள் விளக்கத்துடன் காணலாம்.
ருத்ராவின் சொந்த ஊர் மதுரை. அவருடைய தோட்டத்தில் மல்லிகை பயிர் அதிகம் செய்துள்ளனர் ஒரு நாள் அவருடைய தந்தையுடன் அவர்களது மற்றொரு தோட்டத்திற்கு சென்றபோது அருகிலுள்ள வயலில் உழவு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதைக் கண்டு பக்கத்து தோட்ட உரிமையாளரிடம் என்ன பயிர் செய்கின்றீர்கள் என்று கேட்டார் அதற்கு அவர் நாங்கள் மாங்கன்று நடவு செய்யலாம் என்று நினைக்கிறோம் என்றார்.
அதற்கு ஏன் மா கன்று நடவு செய்ய வயலில் உழவு செய்கிறீர்கள் என்றால்.
அதற்கு பக்கத்து தோட்ட விவசாயம் எந்த விவசாயம் ஆனாலும் உழ வு மிக அவசியமான ஒன்றாகும். உண்டால் உயிருக்கு உறுதி உழுதால் பயிருக்கு உறுதி என நமது முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள் என்றார்.
அதாவது நாம் உயிர்வாழ உணவு எப்படி முக்கியமானதோ அதேபோல் தான் விவசாயத்திற்கு முதலாவதாக உயிரூட்டும் வகையில் மண்ணை உழுவது முக்கியமாகும்
உழ வின் சிறப்பு சிறப்புகள் என்னவென்று கொஞ்சம் சொல்லுங்கள் என்றாள்.
உழ வு என்றால் வேளாண்மை விவசாயம் என்று கூறுவார்கள் பண்டைய காலத்தில் ஐந்து திணைகளில் ஒன்றான மருதம் என்பது வயல் வயல் சார்ந்த இடங்களை குறி க்கும் இந்த வயலும் வயல் சார்ந்த இடத்தையும் விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தான் அக்கால விவசாயிகள் ஒழுங்கு செய்தாள் என்று கூறுவார்கள் அதற்கு நானும் உழ வு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் சொன்ன இந்த உண்டால் உயிருக்கு உறுதி உழுதால் பயிருக்கு உறுதி என்ற பழமொழி மூலமாக எனது தந்தையிடம் எடுத்துச் சொல்கிறேன் என்று கூறினாள்.