உயிராற்றல் விவசாயம் முறைகளைக் கடைப்பிடிப்பதில் அப்படியென்ன நன்மைகள் இருக்கு..

இன்றளவில் நம்நாட்டில் மூன்று முக்கிய அமைப்புகள் மூலம் சுமார் 3000 பண்ணைகளும் 500 பெரிய உணவு தானியங்கள் போன்றவற்றை உயிராற்றல் விவசாயம் முறைகளைக் கடைப்பிடித்து உற்பத்தி செய்து கொண்டுள்ளது மிகவும் பெருமைக்குரியதாகும்.

சமீப காலங்களில் இந்த முறை மிகவும் வேகமாகப் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. உயிராற்றல் விவசாயம் என்பது இயற்கை முறை விவசாயம் முறையில் மேம்படுத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கியது.

தற்போது இந்த வழிமுறைகள் உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வேகமாகப் பரவி வருகின்றன.இந்த வழிமுறைகள் மண்ணை வெகு விரைவில் வளப்படுத்துகிறது. மண்ணை மேம்படுத்துவது மட்டுமின்றி அந்த வளங்களை நிலை நிறுத்துகிறது.

மண்ணின் வளம் குறையக் குறைய ஓரளவிற்குத் தானே ஈடு செய்து கொள்ளும் அளவிற்கு நுண்ணுயிர்ப் பெருக்கம் ஏற்படுத்துகிறது.மண்ணில் மக்குப் பெருக்கம் ஏற்படுகிறது.மண்ணில் மக்குப் பொருட்களின் அளவு கூடுவதன் மூலம் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.

மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. இதன்மூலம் தாவரங்களின் வேர்களின் வளர்ச்சி அபரிதமாக அதிகரிக்கிறது. ஆகவே தாவரங்கள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படுகின்றன.

இதனால் நோய் மற்றும் பூச்சிகள் நீர்ப்புச் சக்தி அதிகரித்து நமக்குத் தொல்லைகள் குறைகின்றன.நீர்ச் செலவு குறைகிறது. இதன் முடிவுகள் ஆரோக்கியமான உணவு மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கிடைக்க ஏதுவாகிறது.

மேற்கூறிய அனைத்து வழிமுறைகளுடன் மேலும் பயிர்ப்பாதுகாப்புக்காகவும் உடனடியாக உபயோகிக்கக்கூடிய சாணம் + மூத்திரம் + வெல்லக் கரைசல், புளிக்கவைத்த பால் போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

பயிர்ப்பாதுகாக்க (பூச்சிதாக்குதல் மற்றும் நோய்கள்) இவற்றுக்கான இயற்கைப் பூச்சி விரட்டிகள்,பூச்சிக் கொல்லிகள், நோய்த்தடுப்பு முறைகள் போன்றவையும் இயற்கை விவசாயம் முறைகளில் கடைபிடிக்கப்படுகின்றன.

இவற்றை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட உயிராற்றல் விவசாயம் முறையின் மூலம் மண்ணை மட்டுமின்றி, காற்று மற்றும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தமுடியும் என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories