எருவிலும் வலியது உழவு!

விவசாயம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது உழ வுதான். உழவு செய்யாமல் எந்த விவசாயம் செய்ய முடியாது அந்த வகையில் உழ வின் மேன்மையை பற்றி இங்கு காணலாம்.

தீனா ஒரு விவசாயின் மகன். அவனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. அது என்ன என்றால் உழவு ஏன் செய்ய வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் உழவுக்கு தான் அதிக செலவாகின்றது. இதற்கு மாற்று வழி ஏதாவது உள்ளதா விவசாயம் செய்ய முடியுமா போன்ற கேள்விகளை தனது தாத்தாவிடம் கேட்கலாம் என நினைத்தான்.

தீனா காலம் மாற மாற அனைத்தும் மாறி விட்டது .ஆனால் விவிசயத்தில் மட்டும் அதுவும் குறிப்பாக உழ வில் மட்டுமே மாற்றம் வரவில்லை .உழவுக்கு பதிலாக அதாவது உழவு செய்யாமல்எ ந்த விவசாயம் செய்ய முடியாதா என கேட்டாள்

அதற்கு அவனது தாத்தா விவிசயத்தில் உழவு தான் மிக முக்கிய .அந்த காலம் உழ வுகள் கால்நடைகளை கொண்டு செய்வார்கள் ஆனால் தற்போது எல்லாவற்றிற்கும் இயந்திரம் வந்துவிட்டது.
உழவு செய்யாமல் நாம் எவ்வளவுதான் திரவம் மற்றும் திண்ம வடிவில் எரு இட்டாலும் நிலம் வளமாக ஆகாது. உழவு செய்தால் தான் நிலம் வளமாகும் என கூறியவாறு “எருவிலும் வலியது உழவு”!
என்ற பழமொழியை கூறினார்

இதைக் கேட்ட தீனா என்ன சொல்றீங்க எனக்கு புரியல என்றான் .அதற்கு உடனே தாத்தா விவசாயத்திற்கு வளம் என்று நாம் நினைக்கிறோம் .ஆனால் உண்மையில் உழவு செய்த நிலத்தில் இடப்படும் உரம் தான் பயிர்களுக்கு சென்றடையும். இல்லையேல் களை தான் அதிகம் வளரும். இதை தான் ” எருவிலும் வலியது உழவு!
என்ற பழமொழி உணர்த்துகிறது .நிலத்திற்கு எவ்வளவு எரு போட்டாலும் நன்கு உழவு செய்ய வில்லை என்றால் அந்த நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்காது என்றார் தாத்தா.

உழவு செய்வதால் பல நன்மைகள் நிலத்திற்கு உள்ளது. உழ வு என்பது கருவிகளையும் எந்திரங்களின் கொண்டு மண்ணை விதை முளைப்பதற்கு முன் பயிர் விளைச்சலுக்கு ஏற்றபடி படுத்துவதாகும். இதில் கலைகள் பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகின்றது. இதனால் நிலம் வளமாகும் என்றார் தாத்தா.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories