சோளம் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற என்ன செய்யலாம்!

சோளம் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து பொள்ளாசி வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கோவை மாவட்ட பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், மானாவாரி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சோளம் அதிக பரப்பில் பயிரிடப்படுகிறது.

இந்நிலையில், சோளம் சாகுபடி செய்யும் போது, விவசாயிகள் உயர் விளைச்சல் பெற கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி ஆலோசனை வழங்கினார் மற்றும்

சோளம் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற
சோளம் சாகுபடியில் மகசூலை தீர்மானிப்பதில், விதை முக்கிய பங்கு வகிக்கிறது. விதைச்சான்று பெற்ற, தரமான விதைகளை, 2.47 ஏக்கருக்கு, 15 கிலோ வீதம் விதைக்க வேண்டும் இதில்

கே – 12 மற்றும் கோ – 30 ரக விதைகள் சிறந்தவை. விதைகளை, 2 சதவீதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் ரசாயனத்தில் கடினப்படுத்தி விதைக்கும் போது, முளைப்பு திறனும், வறட்சி தாங்கும் திறனும் அதிகரிக்கும்.

பயிரை இளம் பருவத்தில் தாக்கும் குருத்து ஈக்களை கட்டுப்படுத்த, குளோர்பைரிபாஸ், 20 ஈ.சி., அல்லது இமிடாகோபிரிட், 70 சதவீதம் டபுள்யூ.பி., மருந்துகளை கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

வேளாண் விரிவாக்க மையத்தில் கிடைக்கும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம்.

இந்த உயிர் உரங்களை, 50 கிலோ தொழு உரத்துடன், தலா, 10 பாக்கெட்டுகள் கலந்து நிலத்தில் இடலாம்.விதைப்புக்கு முன், கடைசி உழவின் போது, 2.47 ஏக்கருக்கு, 12.5 டன் தொழுஉரம் இட வேண்டும்.

சோளப்பயிருக்கு, 40 கிலோ தழைச்சத்து, 20 மணிச்சத்து இடுவது மிக அவசியம். தவிர, தானியப்பயிருக்கான நுண்ணுாட்ட கலவை, 12.5 கிலோ இடுவது, மகசூலை அதிகரிக்க உதவும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories