தை பட்டத்திற்கான விலை முன்னறிவிப்பு – வாழைக்கு ரூ.35 வரை பெறலாம் !

தைப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படும், தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது இதில்

தமிழ்நாட்டில் தைபட்டம் முக்கிய சாகுபடி பருவமாகும். பெரும்பாலும் தானியங்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் காய்கறிகள் இந்தக் காலகட்டதில் சாகுபடி செய்யபடுகின்றன. இதற்கு ஏதுவாக விவசாயிகள் தங்கள் நடவு முடிவுகளை மேற்கொள்கின்றனர். இவ்விதைப்பு முடிவு மேற்கொள்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், எண்ணெய் வித்துகள், காய்கறிகள் மற்றும் வாழைக்கான பிப்ரவரி2022 முதல் மார்ச் 2022 வரையிலான விலை முன்னறிவிப்பை வழங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

தேங்காய் மற்றும் கொப்பரை:
தேங்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.95 வரை இருக்கும்.

நிலக்கடலை மற்றும் எள்
தரமான நிலக்கடலையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.60 முதல் ரூ.65 வரையும் மற்றும் தரமான எள்ளின் பண்ணை விலை ரூ.98 முதல் ரூ.100 வரை இருக்கும்.

காய்கறிகள்:
தரமான தக்காளியின் பண்ணைவிலை கிலோவிற்கு ரூ.25 முதல் ரூ.27 வரை, நல்ல தரமான கத்திரியின்பண்ணை விலை கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ35 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ35 முதல் ரூ .40 வரை இருக்கும் என்றார்.

வாழை
பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 15 முதல் 17, கற்பூரவள்ளி ரூ.15 முதல் ரூ.20 மற்றும் நேந்திரன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.32 முதல் ரூ.35 வரையும் இருக்கும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories