தை மாதத்தில் பெய்யும் மழைக்கு இவ்வளவு சிறப்பா?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சிறப்பு தை மாதத்திற்கு இருந்தாலும் அத்தகைய சிறப்புமிக்க மாதத்தில் மழை பெய்தாலும் சிறப்பு தான்.

கேசவன் தனது சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்தார்.அவர் ஒரு விவசாயி.

கேசவனுக்கு ஒருபுறமும் பொங்கல் விடுமுறை சந்தோஷம்… ஒருபுறம் இயற்கை சூழல் (அதாவது மழை லேசாக பெய்தது.

அதனால் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாட முடியாது என்று தனது சித்தப்பாவிடம் இந்த மழையை எங்களுடைய மகிழ்ச்சியைகெடுக்கிறது என்றார்.

இன்றைய தினம் மழை பெய்ய வேண்டும் என வருத்தத்துடன் கூறினான்.

அவனது சித்தப்பா கோபப்பட வேண்டாம்.” தை மழை நெய் மழை “ என்றார்.

அப்படினா
என்ன சித்தப்பா என்றான் கேசவன்.

அதற்கு அவர் இந்த மழையை விவசாயத்திற்கு மிகவும். அதாவது எந்த உணவு மற்றும் இனிப்பு வகையானாலும் நெய் சிறிதளவு ஊற்றினாலே மணமும் ருசியும் தருகின்றதோ அதேப் போன்று தைமாதத்தில் பெய்யும் மழை சிறிதளவே என்றாலும் உன் வேளாண்மையை மணக்கச் செய்யும் என்றார்.

மற்ற மாதங்களில் மழை பெய்தாலும் வேளாண்மை செய்ய முடியாதா என்றான் கேசவன்.

அதற்கு சித்தப்பா அடை மழை காலத்தை தவிர அனைத்து மழைக்காலங்களில் விவசாயத்திற்கு மிகவும் ஏற்றது என்றார்.

இரு பருவ மாற்றம் என்று சொல்லுவார்களே சித்தப்பா என்றான் கேசவன்

அதற்கு அவர் இல்லையேல் நல்ல மழை பெய்வதற்கான சூழ்நிலை எங்கு உள்ளதோ அங்கு இயல்பாகவே மழை பெய்யும் அதற்கு தான் நிறைய அளவில் மரங்களை வளர்க்க வேண்டும் காடுகளையும் அழிக்க கூடாது அதிக பு கை மிகுந்த வாகனங்களையும் பயன்படுத்துவதை தவிர்த்தல் போன்ற காரணங்களால் இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

என்றார். இப்பொழுது தான் புரிகிறது. இப்படி சிறிதளவு மழை பெய்தாலும் மகிழ்வது போல விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகள் மகிழ்வார்கள் நாம் விழாக்களை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ அதே போல மழை பெய்வது இனி எனக்கு மகிழ்ச்சிதான் இனி எல்லோரிடமும் மழையை கொண்டாட சொல்ல வேண்டும் அதோடு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்றான் கேசவன்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories