நிலக்கடலையில் ஊடுபயிராக உளுந்து எப்படி விதைக்கலாம் ?அதனால் என்ன பயன்?

அங்ககச் சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?

அங்ககச் சான்றிதழ் பெற விரும்புவோர் அருகிலுள்ள சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலரின் உதவியுடன் அங்கக சான்றளிப்பு துறைக்கு விண்ணப்பிக்க புதுப்பிக்க வேண்டும்.

அங்கக வேளாண்மையில் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து பதிவு செய்து கொண்டாலும் சில ஆய்வுகளுக்கு பிறகு அங்கு வேளாண்மைக்கான சான்றிதழ் உங்களுக்கு அளிக்கப்படும்.

நிலங்களில் என்ன மரப் பயிர்களை சாகுபடி செய்யலாம்?

நிலங்களில் மரம் வளர்த்தால் நிலம் வளமாகும்.

ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் தேக்கு ,மா ,மாதுளை ,எலுமிச்சை ஆகிய மரங்களை வளர்க்கலாம்.

நிலக்கடலையில் ஊடுபயிராக உளுந்து எப்படி விதைக்கலாம் ?அதனால் என்ன பயன்?

நிலக்கடலை விதைப்பின் போது வரும் பாத்திகளின் ஓரத்தில் ஒழிக்க குழிக்கு குழி ஒரு அடி இடைவெளியில் வரிசை விதைப்பாக உளுந்து விதைக்கலாம்.

இதனால் நிலக்கடலை அறுவடைக்கு முன்பு உளுந்து அதிக அளவில் மகசூல் கொடுக்கும்.

மேலும் இதனால் நிலக்கடலை பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

கத்தரி விதைகளைஎப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும்?

ஒரு ஏக்கருக்கு கத்தரி நடவு செய்ய 80 கிராம் விதை தேவைப்படும்.

உயிரி உரமான டிரைக்கோடெர்மா விரிடி 1.5 கிராம் அல்லது சூடோமோனஸ் புளோரசன்ஸ் நான்கு கிராமை 80 கிராமம் கத்தரி விதையுடன் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு உலர்த்தி பாத்திகளில் விதைக்க வேண்டும்.

சினை மாட்டிற்கும் ஏன் அதிகமாக பசுந்தீவனம் அளிக்க வேண்டும்?

சினை மாட்டிற்கு அதிகமான அளவு பசுந்தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன், கன்று ஈன்றவுடன் நஞ்சுக்கொடி மாட்டின் கருப்பையிலிருந்து விழாமல் இருப்பதையும் தடுக்கலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories