நெல்லிக்காய்

 

நெல்லிக்கனி எல்லா வகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மை உடையது மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 9.5 வரை தாங்கி வளரும்.

நிலம் தயாரித்தல்

நடவு வயலில் இரண்டு அல்லது மூன்று முறை ஆழமாக உழவு செய்து நிலத்தை பண்படுத்த வேண்டும். 2x2x2 அடி நீளம் ,அகலம் ,ஆழம் உள்ள குழியை எடுத்து ஒரு வார காலத்திற்கு ஆறப்போட வேண்டும்.நடவு செய்யும்போதே தண்ணீர் விட்டால் செடியின் அடிபாகத்தில் சூடு ஏறி இளம்வேர் கருகி விடும். எனவே நடப்பு இரண்டு நாள் முன்பு முன்பாகவே குழிகளில் தண்ணீர் ஊற்றி நன்றாக குளிர வைக்க வேண்டும்.

விதை

ஒட்டுச் செடிகள் தான் நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டுச் செடிகள் வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும் .கன்றின் தண்டு பாகம் பருமனாக இருக்க வேண்டும். ஒட்டு கட்டியுள்ள பகுதியை பிரித்து ஒட்டும் ஒன்றாகக்கூடி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும் .ஒட்டுக் கட்டி மூன்று மாதத்திற்கு மேலான கன்றாக பார்த்து வாங்க வேண்டும்.

விதைத்தல்
குழிகளில் காய்ந்த குப்பை 15 கிலோ, வேப்பம் புண்ணாக்கு அரை கிலோ, மண்புழு உரம் ஒரு கிலோ ஆகியவற்றை குழியில் இருந்து எடுத்த மண்ணோடு கலந்து அடி உரமாக போட்டு குழியை மூடி உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும் .தயார் செய்துள்ள குழிகளில் காலை 8 மணிக்குள் ஆகவே அல்லது மாலை 3 மணிக்குப் பிறகு நடவு செய்ய வேண்டும். வெயி ல் நேரத்தில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும் .வளமான மண்ணாக இருந்தால் இடைவெளி 18×18 அடி அடி வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி விட வேண்டும். வளமற்ற மண்ணாக இருந்தால் 15×15 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும் .குழிகளில் ஒட்டு கட்டியை மேலேயே தெரியுமாறு நடவு செய்ய வேண்டும் .அதன் பக்கத்தில் ஊன்றுகோல்நட்டு செடியுடன் சேர்த்தே இறுக்கமின்றி கட்டி நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories