” நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயும்”
இதில் முக்கியமான ஒன்று தண்ணீர்தான். இத்தகைய தண்ணீரை வயலுக்கு பாய்ச்சும்போது உள்ள நன்மைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை இன்றைய பழமொழி விளக்கத்தின் மூலம் காணலாம்.
பிரசாந்துக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். அவருக்கு நெல் விளையக்கூடிய 5 ஏக்கர் நஞ்சை நிலம் இருந்தது மூன்று போகும் பருவத்திற்கு ஏற்ற நெல் பயிர்களை பயிர் செய்து லாபம் எடுப்பார் அவருடைய மகள் ராகினி ஒருமுறை ஏனப்பா நெல் வயலில் உள்ள களைகளை மட்டும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்.
அதற்கு ராகினியின் தந்தை நம்முடைய விவசாயத்தில் இருந்து கிடைக்கும் நெல் விதைகளை நாம் விதைப்பிற்கு பயன்படுத்துவதாலும் அறுவடையின்போது கலை விதைகளும் சேர்ந்து கலந்து விடுகின்றது இதனால்தான் இந்த கலைகளை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அது மட்டுமா “நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயும்” என்ற பழமொழி அடிப்படையில் நெல்லுக்கு மட்டும் உரம் தண்ணீர் அளி க்காமல் நெல்லை போன்று இருக்கும் அந்த புல்லுக்கு சேர்ந்து நாம் நீர்பாய்ச்சி விடுகிறோம் என்றனர்.
சரி அப்பா இந்த கலைகளை கட்டுப்படுத்தவே முடியாது என்றால் ராகினி அதற்கும் அவளுடைய தந்தையை ஓரளவிற்கு கையால் களை எடுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பொதுவாக நெல் வயலில் நெல் நடவு செய்த 15 முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும் அதனைத் தொடர்ந்து 30 முதல் 45 நாட்களில் இரண்டாம் களை எடுக்க வேண்டும்.
அதோடுகூட கலைகள் தாக்காத நெல் விதை ரகத்தை உபயோகித்தல் கலைகள் தாக்காதவாறு விதை பாத்திகள் அமைத்தல் சுத்தமான கருவிகள் மற்றும் இயந்திரம் பயன்படுத்தல் மற்றும் சுத்தமான பாசன கால்வாய் மற்றும் வரப்புகள் அமைத்தல் வேண்டும் நீண்டகாலம் வழிகின்ற கலைகளில் உறுப்புகளை நீர் மூலம் எடுத்து வராமல் தடுத்தல் போன்ற முறைகளை பின்பற்றினால் இதை சரி செய்யலாம்.
உடனே அடுத்த முறையில் நெல் பயிரிடும் போது இது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றால். அதற்கு அவளுடைய தந்தை நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நம் முன்னோர்கள் கூறிய “நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்” என்ற இந்த பழமொழி போய்காதம்மா என்றார் அதற்கு ராகினி அதுவும் சரிதான் அப்பா என்றாள்.
விவசாயத்தில் கலைகளையும் கட்டுப்படுத்துவது சற்று கடினம் என்பதிலும் நம் முன்னோர்கள் நமக்கு விளக்கியுள்ளார்கள்.