நேரடி நெல் விதைக்கும் கருவி

 

 

நன்செய் நிலங்களில் நேரடி யாகவும் ஒரே சீராகவும் வரிசையில் மேல் விதைக்கலாம். இந்தக் கருவியில் நான்கு உருளை வடிவ விதை பெட்டிகள் உள்ளன .இந்த விதைப் பெட்டிகளில் 150மி மீ இடைவெளியில் 2 வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன. கருவின் நடுவில் 600 மீமீ விட்டமுள்ள சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியை ஒருவர் எடுத்துச்செல்ல கைப்பிடி ஒன்றும் உள்ளது. சேற்று வயல்களில் எளிதாக எடுத்துச் செல்வதற்கு ஏற்ப இரண்டு வழுக்கு தகடுகள் உள்ளன.

இந்தக் கருவியை மணிக்கு ஒரு கிமீ வேகத்தில் இயக்கும் பொழுது நெல்நிர்ணயிக்கப்பட்ட அளவில் சமச்சீராக விழுகின்றது. மேலும் விதை பெட்டியின் உள்ளே இருதுளைகளுக்கு இடையே சிறு தடுப்புகள் அமைத்து விதைக்கும் பொழுது விதை சீராக வருவதற்கு ஏதுவாக தடுப்புகள் செயல்படுகிறது .மேலும் களிமண் போன்ற பிடிப்பு நிலங்களில் இரண்டு சக்கரங்களை பயன்படுத்துவதால் வழுக்கும் தன்மை குறைகின்றது. சேற்றில் ஷால் திறப்பதற்கான அமைப்பை பயன்படுத்தும்பொழுது நெல் விதைக்கப்பட்ட இடத்திலேயும் முளைக்கஉதவுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories