நேரடி நெல் விதைப்புக்கு முறைக்கு ஏற்ற வரட்சியைத் தாங்கி வளரும் பாரம்பரிய நெல் ரகங்கள் என்னென்ன?
குள்ளக்கார், வெள்ளைக்கார், சீரக சம்பா, கிச்சிலி சம்பா, தூயமல்லி, மைசூர் மல்லி, குடவாழை, மாப்பிள்ளை சம்பா, சவுனி ,கௌரி சம்பா மோசனம் ஆகியவை நேரடி விதைப்புக்கு ஏற்ற வறட்சியைத் தாங்கி வளரும், 120 முதல் 150 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகங்களாகும்.
வியாபார ரீதியில் என்ன வகை தேனீக்களை வளர்க்கலாம்?
வியாபார ரீதியில் வளர்க்க இத்தாலியன் தேனீக்கள் ஏற்றவை .இவற்றை பூக்கள் இருக்கும் இடமாகப் பார்த்து அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும்.
தோட்டம் இல்லாதவர்கள்கூட தேனீ பெட்டி வைத்து இந்த தேனீக்களை வளர்க்கலாம்.
பயிர் கடன் பெறுவதற்கான தகுதி என்னென்ன?
பயிர்க்கடன் பெற விவசாயிகளுக்கு சொந்த நிலம் அல்லது குத்தகை காண நிலம் இருக்க வேண்டும்.
குத்தகை நிலம் விவசாயிகளின் நில உரிமையாளர்களிடம் செய்து கொண்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தை காட்டி கடன் பெறலாம்.
பயிர்க்கடன் விண்ணப்பம் செய்பவர்கள் வேறு எந்த நிறுவனத்திடமும் இதே தேவைகளுக்காகவும் கடன் பெற்றிருக்க கூடாது.
மேலும் இதற்கு முன்பு கடன் வாங்கி அதை கட்டாமலும் தவணை தவறிய நிலுவையில் உள்ளவராகவும் இருக்க கூடாது.
நெல் நாற்றங்காலுக்கு மீன் அமிலம் தெளிக்கலாம?
நாற்றங்காலில் விதை நேர்த்தி செய்து விதைக்க லாம் .பிறகு பஞ்சகாவ்யா கரைசல் தெளிக்கலாம்.
இதன் மூலம் பூச்சி கட்டுப்பாடு செய்யலாம் .நெல் வயலில் நாற்று நட்ட பிறகு மீன் அமிலம் தெளிக்கலாம்.
கன்றுகளுக்கான அடர் தீவனம் தயாரிப்பது எப்படி?
மக்காச்சோளம் 42 கிலோ ,கடலைப்புண்ணாக்கு 35 கிலோ, கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு 10 கிலோ,மீன் 10 கிலோ, தாது உப்புக் கலவை இரண்டு கிலோ ,உப்பு ஒரு கிலோ ஆகியவற்றை அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம்.
கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 கிலோ (மற்ற தீவனத்தை உண்ணும் வரை) கொடுக்க வேண்டும். பிறகு அவைகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தின் அளவை கட்டுப்படுத்தலாம்.