நேரடி நெல் விதைப்பு பராமரிப்பு

 

நேரடி நெல் விதைப்பு முதல் முறை வந்தவுடன் அசோஸ்பைரில்லம் 800 கிராம், பாஸ்போபாக்டீரியா 800 கிராம் ஆகியவற்றை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இடவேண்டும்.

வயலில் நன்கு ஈரம் உள்ள சமயத்தில் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களை விதை முளைத்த 14 முதல் 20 நாட்களுக்குள் செய்ய வேண்டும். முதல் கலை பயிர் முளைத்து 15 முதல் 21 நாட்களும் இரண்டாவது கலையை 30 முதல் 45 நாட்களிலும் எடுக்க வேண்டும். மேலும் இயற்கை களைக்கொல்லி 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இடவேண்டும். வறட்சியான நேரங்களில் நீரின் தேவையை குறைக்க ஒரு சதவீத பஞ்சகவ்ய கரைசல் தெளிக்கலாம்.

விதைப்பதற்கு முன்பு கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்தை இட வேண்டும் அல்லது ஏக்கருக்கு 300 கிலோ மக்கிய தொழு உரத்துடன் நெல்லுக்கு பரிந்துரை செய்யப்படும் ,வேப்பங்கொட்டை தூள், மண்புழு உரம் மற்றும் தொழு உரத்துடன் கலந்து நிழலான இடத்தில் போது நீர் தெளித்து ஒரு மாதத்தில் ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி அடியுரமாக இட வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories