பனிக்காலத்தில் மட்டும் வளரும் 65 நாள் பயிர்!

 

 

பனிவரகு பயிரை எந்த பருவத்தில் சாகுபடி செய்யலாம்?

பனிவரகு என்பது அற்புதமான ஒரு சிறுதானியம். பனிக்காலத்தில் இந்த பாசனமும் இல்லாமலேயே பனிப்பொழிவால் கிடைக்கும் நீரிலே வளரக்கூடியது.

கோ 2 கோ 4 என்ற இரண்டு ரகங்கள் உள்ளன. இது 65 நாள் பயிராகும் பணிக்காலமாக கார்த்திகையில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்யலாம்.

Vam என்றால் என்ன எங்கு கிடைக்கும்?

Vam என்பது பயிருக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை மண்ணிற்கு கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசணம்மாகும்.
சிறுதானிய விதைகளை எப்படி விதைக்க வேண்டும்?

சிறுதானியங்களுக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. நிலத்தை மூன்று முறை உழவு செய்து விட்டு விதைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விதைக்க வேண்டும்.

மண்ணில் விதை முளைக்கும் அளவுக்கு ஈரப்பதம் இருந்தால் போதுமானது. விதை முளைத்து விட்டால் நிச்சயமாக பயிர் செழித்து வளரும்.

மானாவரி நிலத்தில் சாகுபடி செய்ய முடியும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறை தண்ணீர் விட்டால் போதுமானது.
ஹியூமிக்யூனிட் திரவத்தை தோட்டப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா?

யுனிமி திரவத்தை தோட்டப் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். 10 கிராம் பவுடரை 50 மில்லி நீரில் கரைத்து 15 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் நீருடன் கலந்து தெளிக்கலாம்.

கால்நடைகளுக்கு தேனிகொட்டிவிட்டால் என்ன செய்யலாம்?

மாடுகளில் தேனீக்கள் கடித்துவிட்டால் வலியினால் மாடுகள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கும். மேலும் தீவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்.

இதனை சரிசெய்ய மாங்காய் காம்பிலிருந்து வழியும் பாலை கடிபட்ட இடத்தில் கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும் அல்லது கடிவாயில் சுண்ணாம்பு தடவினால் வீக்கம் குறைந்து விஷமும் இறங்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories