பருத்தியில் ஊடுபயிராக துவரையை விதைக்கலாம் என்றால் எப்படி விதைப்பது?
பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர் விதைப்பின் போது துவரையை ஊடுபயிராகவோ அல்லது வரப்பு பயிராக விதைக்கலாம்.
பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர் விதைப்பின் போது 13 முதல் 18 வரிசைக்கு,ஒரு வரிசையாக மூன்று அடி இடைவெளியில் துவரையை ஊடுபயிராக விதைப்பு செய்யலாம்.
மேலும் அதிகம் நடந்து செல்லாத வரப்பு பகுதிகளாக இருந்தால் வ ரப்பிலும் மூன்று அடி இடைவெளியில் விதைக்கலாம்.
இந்த முறையை பயன்படுத்தும் போது பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை தடுக்கலாம்.
மூலிகைப் பூச்சிவிரட்டி போல் பயிருக்கு தெளிக்க வேறு என்ன கரைசல் தயாரிக்கலாம்?
வேப்பங்கொட்டை தூள் ஒரு கிலோ ,பசுந்தயிர் 2 லிட்டர் ,கோமியம்-3 லிட்டர்,கடுக்காய் தூள் 10 கிராம், அதிமதுரம் தூள் 10 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேப்பங்கொட்டை தூளுடன் 5 லிட்டர் தண்ணீர் பசுந்தயிர் மற்றும் கோமியம் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் கடுக்காய்த்தூள் மற்றும் அதிமதுரம் தூள் சேர்த்தால் கரைசல் தயாராகிவிடும்.
பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கரைசலை கலந்து பூ பூக்கும் சமயத்தில் தெளிக்க வேண்டும்.
பலதானிய சாகுபடிக்கு என்னென்ன விதைகளில் எந்த அளவில் விதைக்க வேண்டும்?
நாட்டுச் சோளம் ஒரு கிலோ ,நாட்டு கம்பு அரை கிலோ, திணை கால் கிலோ ,சாமை கால் கிலோ, குதிரைவாலி கால் கிலோ ,உளுந்து ஒரு கிலோ ,பாசிப் பயறு ஒரு கிலோ, தட்டை பயறு ஒரு கிலோ, கொண்டைக் கடலை 2 கிலோ, துவரை ஒரு கிலோ, கொத்தவரை அரை கிலோ ,நரிப்பயறு அரை கிலோ, தக்கைப்பூண்டு 2 கிலோ ,சணப்பை 2 கிலோ ,கொள்ளு ஒரு கிலோ ,கடுகு அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ, சீரகம் கால் கிலோ ,கொத்தமல்லி ஒரு கிலோ என்ற அளவில் தானியங்களை விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
தேக்குமரம் எப்போது பூத்து காய்ப்புக்கு வரும்?
தேக்கு நடவு செய்து 6 ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும்.
தேக்கு மரத்தில் ஜூன்- செப்டம்பர் மாதங்களில் பூக்கள் தோன்றி நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காய்க்கத் தொடங்கும்.
பர்கூர் இன மாட்டின் இயல்புகளைப் பற்றி கூறுகிறது?
ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்கா பர்கூர் குன்றுகளை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற இனம் தான் இது.
பழுப்பு நிறத்தில் வெள்ளை புள்ளிகளும், திட்டுகளும் கொண்ட உடல் அமைப்பை கொண்டிருக்கிறது. உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் ஏ ற்ற திடமான இனம்.