பள்ளி & கல்லூரி மாணவர்களின் விவசாயத் தேடல் பற்றி ஒரு அலசல்!

தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்று களக் பயனத்தை மேற்கொண்டனர். இந்த பயனத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள், விசாய முன்னோடிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி நிகழ்கால எதார்த்த அனுபவங்களை பெற்றனர் மற்றும்,

திருவண்ணாமலை மாணவர்களின் களப்பயணம்
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சானூர் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவியர் கள் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, களப்பயணம் மேற்கொண்டனர். இவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் இப்பயணம் மேற்கொண்டனர் இதை,

விவசாயிகள்-மாணவர்கள் கலந்துரையாடல்
இந்நிலையில், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, முன்னோடி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர். இதில், தர்மபுரி மாவட்டம் மூங்கில்பட்டியை சேர்ந்த முன்னோடி பட்டு விவசாயி பாண்டியனை சந்தித்து, மல்பெரி மற்றும் பட்டு உற்பத்தி குறித்து தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர். அவர், விவசாயம், கால்நடை வளர்ப்பு, தீவன பயிர்கள் வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து தன், 40 ஆண்டுகால அனுபவத்தை மாணவியருடன் பகிர்ந்து கொண்டார் என்றார்,

மேலும், பட்டுப்புழு வளர்ப்பில், மல்பெரி இலை சாகுபடி, புழுவளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கினார். இவ்வாறு, முறையாக பட்டு வளர்ப்பில் ஈடுபடும் போது, மாதம், 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறலாம் என, மாணவியருக்கு அவர் எடுத்துரைத்தார் மற்றும்,

திருச்சி மாணவர்களின் களப் பயனம்
திருச்சி அன்பில் தர்மலிங்கம், வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள், விருத்தாசலம் அறிவியல் நிலையத்தில் தங்கியுள்ளனர். ஊரக வேளாண் பணி அனுபவத்திற்காக, அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகளிடம் நெல், உளுந்து, வேர்க்கடலை சாகுபடி அனுபவங்களை, முன்னோடி விவசாயிகள், குப்புசாமி, வைத்தியநாதன், ராமலிங்கம் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.
மேலும், வேர்க்கடலை பிரிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளைப் பார்த்தும், கேட்டும் மாணவிகள் தெரிந்து கொண்டனர். உடலுக்கு வலுவூட்டும் செம்பருத்தி தேனீர் தயாரிக்கும் செயல்முறைகளை, உழவர் மன்ற விவசாயிகள் அவர்களுக்கு செய்து காட்டினார் இவர்,

தஞ்சை மாணவர்களின் களப்பயணம்
தஞ்சாவூா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் ரிஷியூா் இயற்கை வேளாண் பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டனர். அங்கு, இன்றைய விவசாயத்தின் நன்மைகள், தீமைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களை கேட்டறிந்ததுடன் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், பயன்களையும் குறித்த விழிப்புணா்வு பயிற்சி பெற்றனா் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories