விதை அளவு
பாகற்காயை பொறுத்தவரை ஏக்கருக்கு ஒரு கிலோ 800 கிராம் விதை தேவைப்படும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைத்தல்
வரிசைக்கு வரிசை 2 மீட்டர் குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விட்டு குழிக்கு 5 விதைகள் ஒன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.