பீன்ஸ் பாதுகாப்பு முறைகள்

 

களை நிர்வாகம்

20 முதல் 25 நாட்கள் மற்றும் 40 முதல் 45 நாட்களில் களை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு முறை

வெட்டு புழுக்கள்

வெட்டு புழுக்களைக் கட்டுப்படுத்த தைரியம் பூச்சிக்கொல்லி, கோதுமை தவிடு, கரும்பு சக்கரை(2:1:1என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

அஸ்வினி

அஸ்வினியை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 3 சதவீதம் தெளிக்க வேண்டும். 10 சதவீத வேப்ப இலை சாற்றை பயிரிட்ட 45, 60, 75 நாட்களில் தெளிக்க வேண்டும்.

காய்த்துளைப்பான்

காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த 10% பூண்டு மிளகாய் கரைசல் சாற்றை பயிரிட்ட 45, 60, 75 நாட்களில் தழை தெளிப்பானை 3 முறை தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்

3% பஞ்சகாவ்யாவை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு 10 நாட்கள் இடைவெளி விட்டு தழை தெளிப்பான் தெளிக்க வேண்டும் வேண்டும்

அறுவடை

90 முதல் 100 நாட்களில் முதிர்ந்த பச்சைக் காய்கள் கிடைக்கும்.

மகசூல்
8 முதல் 19 டன்என்ற அளவில் விளைச்சல் தரும்.

உரங்கள்

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா,ரைசோபியம் ஆகியவற்றை 25 கிலோ என்ற அளவில் நிலம் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்.

பயன்கள்

பீன்ஸை கொதிக்கவைத்து ஆறிய நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

தொண்டைப்புண் ,வறட்டு இருமல், நாவறட்சி இவற்றைப் போக்கும். கை கால் நடுக்கத்தை போக்கும்.
நீரழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயின்மூலம் உண்டான பாதிப்புகள் குறையும்.

பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இரத்தக் குழாய் அடைப்புகளைப் போக்குகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது.இதய அடைப்பு இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories