களை நிர்வாகம்
விதைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் பொழுது களைக் கொல்லியான அட்ரசின் 50 சதம் நனையும் தூள் 100 கிராம் அல்லது 1.6 லிட்டர் \ஏக்கர் என்ற அளவில் 360 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி பயன்படுத்த வில்லை எனில் விதைத்த 10-ம் நாளில் ஒரு முறையும் 40 முதல் 45 வது நாளில் ஒரு முறையும் கைகளை எடுக்க வேண்டும்.
குருத்துப் புழு தாக்குதல்
ஆரம்ப கட்ட சுருட்டுப் புழுத் தாக்குதல் தென்படும் இதனை கட்டுப்படுத்த செடிக்கு 2 கிராம் வீதம் பியூரடான் குருணை மருந்தினை மணலில் கலந்து செடியின் குருத்தில் விதைத்த 20ஆம் நாள் இடவேண்டும்.