மக்காச்சோள உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு 35% மானியம்- அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளத்தை மூலப் பொருளாக கொண்டு செயல்படும் அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக, 35 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் (Atma Nirbhar Bharat Abhiyan) ஒரு பகுதியாக அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக, பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

2020-21 முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் எனவே,

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு மக்காச்சோளம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதன் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சி போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு, தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இது தொடர்பான விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரிலோ அல்லது 91235 01559 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories