மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையைப் பொறுத்து அந்த மண்ணில் எந்த பயிர்கள் மற்றும் எந்த ராகம் தழைத்து வளரும் என்பதை அறிந்த பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.
நிலத்தை நன்செய் மற்றும் புன்செய் என்ற இரு வகைகளாக பிரிக்கலாம் .இவற்றில் பெரும்பாலான நன்செய் நிலங்கள் ஆற்று நீர் பாசனத்தில் வண்டல்நிலப்பகுதியாக உள்ளது பு ஞ்சை பகுதிகளும்செம்மண் கரிசல் பகுதிகளாக உள்ளன.
இரண்டு வகையான செம்மண் காணப்படுகிறது
இதில் ஒரு வகை அதிக சுண்ணாம்பு தன்மை கொண்டதாகவும் மற்றொரு வகையில் கரிசல்மண் சற்று தளர்வாக கருமை நிறத்துடன் காணப்படுகிறது.
ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் காணப்படுகின்றன. மண் பரிசோதனை மூலம் இதனைக் கண்டறியலாம்.