செம்மண்:
செம்மண்ணில் , புளி , வேம்பு, முந்திரி, இலந்தை, நாவல் ,சூபாபுல் , மா, வாத நாராயண, வாகை , முருங்கை, செம்மரம், புங்கன் ஆகிய மரங்களை நடவு செய்யலாம்.
வண்டல் மண்:
வண்டல் மண் நெல்லி, இலுப்பை, மூங்கில், கருவேல், வேம்பு , நாவல், புங்கன் ஆகிய மரங்கள் நன்கு வளரும்.
களிமண்ணில்
களிமண்ணில் குறிப்பிட்ட மரங்கள் மட்டுமே நன்றாக வளரும். அந்த வகையில் , வேம்பு , புளி , கருவேலம், மஞ்சணத்தி, நாவல், வாத நாராயணா, கொன்றை இலுப்பை , நெல்லி, வாகை போன்ற மரங்களை களிமண்ணில் நடவு செய்யலாம்.
கரிசல் மண்:
கரிசல் மண்ணில் பூவரசன், நுணா, வேம்பு, புளி ஆகிய மரங்கள் நன்கு வளரும்.
உவர்மண்:
உவர் மண்ணிலும் வேம்பு , புளி, நெல்லி வெல்வேல் வேலிக்கருவேல் ஆகிய மரங்கள் செழித்து வளரும்.
களர் நிலம்:
களர் நிலத்தில் வேம்பு, வெல்வேல் , நீர் மருது, நெல்லி, இலுப்பை,சூபாபுல், சீமைக்கருவேல் ,விலா ஆகிய மரங்களை நடவு செய்யலாம்.
மணற்பாங்கான இடம்:
மணற்பாங்கான இடங்களில் சவுக்கு, கொடுக்காப்புளி, பூவரசு, புளி, முந்திரி, பனை, தென்னை ,புண்ணை ஆகிய மரங்களை வளர்க்கலாம்.
ஆற்றுப் படுகை மண்:
தேக்கு, கொடுக்காப்புளி, தைலம், நிர் மருந்து, நெல்லி, மூங்கில், சவுக்கு, பூவரசு, சுபாபுல் , நாவல், நொச்சி போன்றவற்றை ஆற்றுப் படுக்கையை மணலில் நடவு செய்யலாம்.
சதுப்பு நிலம்:
சதுப்பு நிலத்தில் வளர்வதற்கு நெல்லி, பூவரசு, வேம்பு,புங்கன் புளி, நுணா,வரத நாராயணன், மூங்கில் ,நீர் மருது ஆகிய மரங்கள் ஏற்றவை.
வரப்புகள் மற்றும் தோட்டங்களை சுற்றி நடவு.
தேக்கு , சுபாபுள், முள்முருங்கை, இலவம், வேம்பு ,புங்கன் சவுக்கு, தைலம்.
வீட்டின் முன்புறம் வேம்பு மற்றும் புங்கன் மரங்களையும் வீட்டின் பின்புறம் பலா , முருங்கை, சீதா,பப்பாளி போன்ற மரங்களையும். வீட்டின் இரு பக்கங்களிலும் தேக்கு, பப்பாளி மரங்களையும் வளர்க்கலாம்.
சாலையோரங்களில் புளி ,வேம்பு,புங்கன்,மா,நாவல் ஆகிய மரங்களையும் இருப்புப் பாதையில் புளி , வேம்பு, புங்கன், நாவல், மா ஆகிய மரங்களையும் நடவு செய்யலாம்