வயலில் எலி வராமல் இருக்க என்ன செய்யலாம்?
நொச்சி மற்றும் எருக்கன் செடியை வயலைச் சுற்றி வேலி பயிராக நட்டால் எலி வயலுக்குள் வராது.
நெல் வயலில் எலியை கட்டுப்படுத்த சணப்புபூவை சிறிய துண்டுகளாக்கி அதை பரவலாக ஆங்காங்கே வயலில் இட்டால் அதிலிருந்து வரும் ஒருவித வாசனையில் எலிகள் ஓடி விடும்
மாங்காயையும் இயற்கை முறையில் பழுக்க வைக்க என்ன செய்யலாம்?
ஆவாரம் இலை யை ஒரு அடுக்கு பரப்பி அதன்மீது மாங்காய்களை இ ட்டு பிறகு ஆவாரம் இலையை அதன் மீது போட்டு வைத்தால் மாங்காய் பழு க்கும்.
இலை உறிஞ்சும் பூச்சித் தாக்குதலை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளித்தால் இலை உறிஞ்சும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
எலுமிச்சை மரத்தில் அதிக மகசூல் கிடைக்க என்ன செய்யலாம்?
3 கிலோ அளவில் பன்றி எருவை மரத்தில் இ ட்டால் பூ உதிர்தல் தடுக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.
நெல் நடவு செய்து எத்தனை நாட்களுக்கு பிறகு பஞ்சகாவியம் பயன்படுத்தலாம்?
15 முதல் 20 நாட்களில் நெல் பயிருக்கு பஞ்சகாவியா அளி க்கலாம்.
அஸ்வினி பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது?
இனக்கவர்ச்சி பொறி வைத்து அஸ்வினி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
கறவை மாட்டிற்கு அசோலாவை தீவனத்துடன் கலந்து கொடுக்கலாமா? எத்தனை நாட்களில் வளர்ச்சி அடையும். எப்படி அறுவடை செய்யலாம்?
கறவை மாட்டிற்கு அசோலாவை தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம் .அசோலா என்பது நிலத்திற்கு இட பயன்படும் ஒரு உரம் மட்டுமல்ல.
இது கால்நடைகளுக்கு சிறந்த உணவாகவும் பயன்படுகிறது .இதை பால் கறக்கும் கால்நடைகளுக்கு வழங்குவதால் பாலின் அளவானது அதிகரிக்கும்.
அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும் .பிறகு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
அசோலாவை ஒரு சதுர சென்டிமீட்டர் ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும்.