வட்டப்பாத்தின் வெளிவட்டத்தில் மக்காச்சோளம், வெங்காயம் ,கீரை போன்ற பயிர்களை நடவு செய்யலாம். அதே மாதிரி உட்பகுதியில் உள்ள நடு வட்டத்தில் வெண்டை, கத்திரி ,தக்காளி, மிளகாய் போன்ற செடிகளை நடவு செய்யலாம்.
பாத்தி ஓரங்களில் தட்டைப்பயிர் இஞ்சி மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். வாய்க்கால் ஓரங்களில் ஒரு அடி இடைவெளியில் மற்ற செடிகளுக்கு இடையில் ஒரு ஆமணக்குச் செடி நடவு செய்தால் செடிகளின் பூச்சி தாக்காமல் கட்டுப்படுத்தலாம். அதேபோல வட்டத்தில் வளரும் களைச் செடிகளை பறித்து செடிகளுக்கு மூடாக்காகப் போடலாம். இதனால் நிலத்தில் உள்ள ஈரத்தன்மையை உலராமல் பாதுகாக்கலாம்.
வட்டப்பாத்தி அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்
வட்டப்பாத்தி அமைத்து பல பயிர்களை சாகுபடி செய்யலாம் .இவ்வாறு அமைப்பதால் செடிகளுக்கு வேரழுகல் வராமலும் தடுக்கலாம் .மண்ணிற்கும் வே ருக்கும் இடையே நல்ல காற்றோட்டம் கிடைக்கும். பயிர்களுக்கு சீரான முறையில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் மற்றும் பாத்தி அமைப்பதால் நீர் தேவையானது மிகவும் குறைவாகும். நிலத்தை அடிக்கடி உழவு தேவையில்லை. வட்டப்பாத்தி அமைப்பதன் மூலம் தொடர்ந்து பல பயிர்களை சாகுபடி செய்யலாம் .ஒரு சாகுபடி முடிந்த பிறகு நிலத்தை நன்கு கொத்திவிட்டு உரத்தை மண்ணில் கலந்து கரை அமைத்து விதைகளை ஊன்றுதல் இவ்வாறு செய்வதால் குறைந்த இடத்தில் பல பயிர்களை சாகுபடி செய்யலாம்.
\\\\\\\\\\