வாசனைபயிரான வெட்டிவேர் சாகுபடி (பகுதி-2)

வெட்டிவேர் சாகுபடியின் உர மேலாண்மை, ஊடு பயிர் செய்தல், பயிர் பாதுகாப்பு, அறுவடை, மகசூல், போன்றவை குறித்து இங்கு காணலாம்.

உரங்கள்

வெட்டிவேரின் மகசூலை அதிகரிக்க எக்டருக்கு தொழு உரம், மண்புழு உரம் மற்றும் பஞ்சகவ்ய கரைசல் அமிர்த கரைசல் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

ஊடுபயிர்

பயிரின் ஆரம்ப வளர்ச்சி (70 முதல் 90 நாட்கள்) தட்டைப் பயிறு, உளுந்து ,பச்சைப் பயறு, கொத்தவரை, துவரை மற்றும் துளசி ஆகியவற்றை பயிரிடலாம்.

பயிர் பாதுகாப்பு

பூச்சித்தாக்குதல் இந்த பயரில் அதிகமாக இருக்காது. வறண்ட பகுதியில் கரையான் மற்றும் வெள்ளை எறும்புகள் அதிகமாக வந்து வேர்களை தாக்குகின்றன.

வேப்ப எண்ணைய் தெளித்து விடுவதன் மூலம் கரையான் மற்றும் வெள்ளை எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்-

இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா கரைசலை தெளித்து வரவும்.

அறுவடை

வெட்டிவேரில் அதிக எண்ணெய் மகசூல் பெற ஜூலை மாதங்களில் நடப்பட்ட பயிர்களை 18 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்ய வேண்டும்.

அறுவடை

வெட்டிவேரில் அதிக எண்ணெய் மகசூல் பெற ஜூலை மாதங்களில் நடப்பட்ட பயிர்கள் 18 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்ய வேண்டும்

அறுவடையின் போது கைகளால் செடிகளை வேருடன் சேர்த்து தோண்டி எடுக்கப்படுகிறது. வேர்களிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு சுத்தம் செய்து 1 முதல் 2 நாட்கள் நிழலில் உணர்த்தப்படுகிறது.

பின்வரும் தன்மைகளை கொண்ட வேர்கள் தரமான எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

சிறிது சிவ ந்த பழுப்பு நிறமாக இருக்கும்.

தோலை உரித்த உடனே கடினத் தன்மையுடன் காணப்படும்.

தடித்த கடினமான நீண்ட பலமுள்ளதாக இருக்கும்.

மெல்லும் போது மிகவும் கசப்புத் தன்மை கொண்டிருக்கும்.

மகசூல்

வெட்டிவேர் பயிரில் இருந்தது தோராயமாக ஒரு எக்டரில் மூன்று முதல் நான்கு வேர்களை அதாவது 15 முதல் 16 கிலோ கிராம்எண்ணெய் கிடைக்கிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories