” உழுகிற போது ஊருக்கு போயிட்டு
அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்”
விவசாயத்தை எப்பொழுதும் முறையாக செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் எனவே விவசாயத்தில் கடைபிடிக்க வேண்டிய விதத்தை இன்றைய பழமொழியில் பார்க்கலாம்.
நடராஜ் அவர்களுக்கு முக்கிய தொழில் விவசாயம் விவசாயத்தை அதிகமாக நேசிப்பார் அதுவும் பருவம் தவறாமல் பயிர் செய்து நல்ல லாபம் எடுப்பார்.
ஒருமுறை செல்வம் இவரது அந்த ரகசியத்தை அறியும் வகையில் அவரிடம் விசாரித்தார் அதற்கு நடராஜன் விவசாயத்தில் சிலர்
“உழுகின்ற போது ஊருக்கு போயிட்டு அறு க்கின்ற போது அரிவாளோடு வந்தானாம் என்றார்”
என்ன சொல்றீங்க எனக்கு புரியவில்லை என்று கேட்டார் செல்வம்.
அதற்கு நடராஜ். விவசாயம் செய்கிற போது அதை முறையாக செய்தல் வேண்டும் அவ்வாறு செய்யாத பலனை மட்டும் எதிர்பார்க்கக்கூடாது இக்கருத்தை தான் உழுகிற போது ஊருக்கு போய்ட்டு அறு கிற போதும் அரிவாளோடு வந்தானாம்” என்ற பழமொழி மூலம் சொன்னேன்.
நாம் எப்பொழுதும் அனைவரும் வயலில் பயிர்கள் பயிரிட போது அதாவது பட்டம் மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப பயிரிட வேண்டும்.
அப்போதுதான் அது விளைச்சல் நன்றாக இருக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கணிசமாகக் குறைவாக இருக்கும் இல்லையெனில் அது பாழ்பட்டுப் போய்விடும்.
நாம் பயிரிடும் சூழ்நிலை பட்டம் தேர்வு செய்யும் பயிர் உரம் நீர் மேலாண்மை களை மேலாண்மை அறுவடை என விவசாயத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் அவர் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தாமல் கடைசியில் பலனை எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்றார்.
அதற்கும் நானும் இனிமேல் பருவத்தில் பயிர் செய்து வருவதுடன் முறையான கவனத்துடன் கூடிய பராமரிப்பு செய்து நல்ல லாபம் எடுப்பேன் என்றார்.
வேளாண்மை டிப்ஸ்
இயற்கை உரம் தயாரிப்பில் இலை தழைகள் தென்னை நார் கழிவு நீர் வீனான தானியங்கள் போன்ற அனைத்து தாவரக் கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
விதை நிலக்கடலை 40 கிலோவிற்கு 2 லிட்டர் என்ற அளவில் பஞ்சகாவியா உற வைத்து இரண்டு மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும் இதன் மூலம் வேர் அழுகல் நோய்கள் வராது.
வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகள் பூக்கள் தாக்கினால் வெள்ளைப்பூண்டை அரைத்து அதனுடன் தெளிக்க வேண்டும்.
பழ மரங்களில் அணில்களின் தாக்குதலை சமாளிக்க ஒரு கைப்பிடி அளவு பூண்டை அரைத்து நான்கு லிட்டர் தண்ணீரில் கரைத்து மரங்கள் மீது தெளிக்க வேண்டும் பூண்டு வாசனையில் அணில்கள் ஓடிவிடும்.