வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

சந்தைகளில் வெங்காய விலை உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிகரித்துவரும் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.

2021 ஜனவரி 31 வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு, இரசாயனப் புகை கொண்டு தூய்மையாக்குதல் மற்றும் தாவர நலச் சான்றிதழ் ஆகிய விதிகளில் இருந்து விலக்களிக்க வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை முடிவெடுத்துள்ளது.

மேற்கண்ட தளர்வுகள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இரசாயனப் புகை கொண்டு தூய்மையாக்கப் படாமல் இந்தியா வந்தடையும் வெங்காயச் சரக்குகள், பதிவு பெற்ற நிறுவனத்தின் மூலம் இறக்குமதியாளரால் இங்கேயே தூய்மைப் படுத்தப்படும் என்றனர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories