தரிசு நிலங்களை வளப்படுத்தி விவசாய பணிகளை அதிக படுத்த வேண்டும்!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார். இதன் மூலம் விவசாய விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றார்.

கலந்தாய்வு கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

கிராமப்பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும். குறிப்பாக, கிராமப்பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பசுமை வீடு (Green House) திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்குதல், தெருவிளக்குகள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார் எனவே

விவசாய பணிகள்
கிராமப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும், தனிநபர் விவசாயப் பணிகளில் அதிகளவு ஆர்வம் காட்டவும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேைல உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு தரிசு நிலங்களை சீரமைத்து விவசாய பணிகளை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் தரிசு நிலங்களில் அதிக அளவு விவசாயம் செய்ய முடியும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories