நெல் வயலில் வரப்பில் உளுந்து பயிரை வரப்பு பயிராக பயிரிடும் போது நெல் பயிரை தாக்கும் புங்கம் குஞ்சுகள், முட்டைகள், இலைச் சுருட்டுப் புழுவின் முட்டைகள், இளம் புழுக்களை உளுந்து ப யராலும் கவரப்பட்ட நண்மை செய்யும் பூச்சிகளை அழித்து விடும்.
தூய்மையான கருப்பட்டியை எப்படி அறிவது?
கருப்பட்டி உண்மையானதா என்பதை விலையை வைத்து அறிய முடியாது.
தூய்மையான கருப்பட்டியை எளிதாக உடைக்க முடியும். மேலும் அதனுடைய சுவை அதிக இனிப்பு தன்மை இல்லாமல் சற்று உவர்ப்பு கலந்த இனிப்புச் சுவையாக இருக்கும் .தொடும்போது சற்று அழுத்தம் கொடுக்கும் வகையில் இருக்கும்.
விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
சொட்டு நீர் பாசனம் அமைக்க கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கள், நில வரைபடம், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ,சிறு குறு விவசாயிகள் என்ற சான்றிதழ் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தோட்டக்கலை துறையை அணு க வேண்டும்.
வயலில் பறவை குடில் அமைப்பதால் என்ன பயன்?
நீளமான குச்சிகளை கொண்டு “T” வடிவ பறவைத் தாங்கிகளை ஏக்கருக்கு 15-2o என்ற அளவில் பயிரின் உயரத்திற்கு ஒரு அடி உயரத்தில் வைக்க வேண்டும்.
இவை பறவைகள் வந்து உட்கார வசதியாக இருக்கும். உட்காரும் பறவைகள் வயலில் காணப்படும் புழுக்களை உண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும்.
ஆடுகளில் சினை பிடிப்பதற்கு கால தாமதம் ஆவது ஏன்?
மெய்ச்சலில் வளரும் ஆடுகளுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் சினை ப்பிடிப்பது காலதாமதமாகும்.
இதை தவிர்க்க தாதுஉப்பு கட்டியை கொடுப்பது அவசியம். தீவனத்தில் ஒரு நாளைக்கு 20 கிராம் தாது உப்புக்களையும் 10 கிராம் சமையல் உப்பும் கொடுக்க வேண்டும்.