ஏக்கருக்கு 500கிலோ மகசூல் பெறவும்,கூடுதல் லாபம் ஈட்ட எளிய வழி முறைகள்!

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் உழவு செய்த நிலங்களில் 65-75 நாட்கள் வயதுடைய பயறு வகைகள் சாகுபடி செய்து விதைப்பண்ணைகளை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம் என வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஏற்ற ரகங்கள் (Loading varieties)
பயறு வகைகளில் உளுந்து – வம்பன் 6, வம்பன் 8 மற்றும் எம்.டி.யூ 1 இரகங்கள், பாசிப்பயறு – கோ 8 இரகம், தட்டைப் பயறு கோ (CP) 7 மற்றும் வம்பன் 3 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தது எனவே

விதைப்பு (Sowing)
ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீட்டரும், செடிக்கு செடி 10 செ.மீட்டரும் இடைவெளி இருக்கும் வகையில் சதுர மீட்டருக்கு 33 செடிகள்வரும் வகையில் விதைப்பு செய்ய வேண்டும்.

உரம் (Compost)
பூக்கும் பருவத்திலும், இளங்காய் பருவத்திலும் 4 கிலோ டிஏபி உரத்தை 20 லிட்டர் தண்ணீரில் முதலில் ஊற வைத்து பின்பு வடிகட்டி தெளிந்தக் கரை சலை எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.

உயிரியல் கட்டுப்பாட்டு முறை (Biological control system)
பூச்சி நோய் கட்டுப்பாடுகளுக்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறை சிறந்த தாகும். காய் மற்றும் இலைப்புழுக்களுக்கு மெட்டாரைசியம் சிறந்தது இதில்

நடவு (Planting)
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பிறகு நடவு செய்யலாம்.
இவ்வாறு விதை நேர்த்தி செய்வதன் மூலம் பெரும் பாலான பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்த மிகச் சிறந்த முறையாகும். இந்த முறையில் விதைப்பண்ணை அமைத்தால் ஏக்கருக்கு குறைந்த பட்சம் 500 கிலோ மகசூல் பெறலாம் மற்றும்

தொடர்புக்கு (Contact)
எனவே, பயறு வகைகள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

தகவல்

சீ. சக்திகணேஷ்
இராமநாதபுரம் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories