நிலக்கடலையில்விதை நேர்த்தி செய்வது எப்படி

 

ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா4 கிரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத் திறன் அதிகரிப்பதோடு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது விதை நேர்த்தி மிகவும் கவனமாக செய்ய வேண்டும் ஏனெனில் விதை நேர்த்தி செய்யும் போது விதை முறையில் பாதிப்பு ஏற்பட்டால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்

விதை நேர்த்தி செய்யாவிட்டால் ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 4 பாக்கெட் சேர்த்து 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

விதைத்தல்

நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் பத்து சென்டிமீட்டர் செடிக்குச் செடி இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்பொறை நிலங்களில் விதைப்புக் கருவி கொண்டு விதைக்கும்போது விதையின் அளவுகுறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் விதைத்து விடலாம் .விதை கருவியின் மூலம் விதைப்பது சரியான பயிர் இடைவெளியை கடைபிடிக்கலாம். இவ்வாறு செய்வதால் கலை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாக மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.
நீர் நிர்வாகம்

விதைக்கும் சமயம் ஈரப்பதம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு உயிர் தண்ணீர் விதைத்தல் 4 முதல் 5 ஆவது நாள் விட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒரு முறை நீர் விடவேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories