ப்ரோக்கோலி க்கு என்ன பூச்சு மருந்து பயன் படுத்தலாம்?

ப்ரோக்கோலி க்கு என்ன பூச்சு மருந்து பயன் படுத்தலாம்?

ஆமணக்குச் செடியை வயலை சுற்றிலும் பயன்படுத்துவதன் மூலம் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.

வாரம் ஒரு முறை தசகவியா கரைசல் தெளிப்பதன் மூலம் பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்குப்பொறி மற்றும் மஞ்சள், நீல நிற அட்டைகளை வயலைச் சுற்றிலும் கட்டி தொங்க விடவும்.

மாதம் மூன்று முறை 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரத்தை 3 லிட்டர் கோமியத்துடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம் இதன் மூலம் அசுவினி பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குவதைத் தடுக்கலாம்.

வீட்டை சுற்றிலும் மரங்களை வளர்ப்பதால் என்ன நன்மை?

வீட்டை சுற்றி மரங்கள் வளர்த்தால் காற்றுதூய்மையாகும் .நிழலும் கிடைக்கும். கோடைகாலங்களில் வெப்பத்தை தடுத்து ஒரு குளிர்ச்சியான சூழலை நமக்கு தரும்.

மேலும் மரம் மழையை கொடுக்கும் தன்மையை பெற்றிருக்கிறது .வானில் மேகங்கள் உருவாகும் பொழுது அவை மரங்களின் மூலம் வீசும் காற்றினால் குளிர் விக்கப்பட்டு மழையை கொடுக்கிறது.

மாவு பூச்சி கள் என்னும்பூச்சிகளை இயற்கை முறையில் எப்படி அழி ப்பது?

பச்சை மிளகா 250 கிராம் ,இஞ்சி250 கிராம், பூண்டு 250 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊறவைத்து வடிகட்டி எடுத்து 300 மில்லி 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும், இதன் மூலமாக மாவுபூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தேனி யானது தேனை எப்படி செய்திருக்கின்றது?

தேனியைச் ஈ பேரினத்தில்சேர்ந்த சிறு பூச்சி மற்றும் ஆறு கால்களைக் கொண்ட பறக்கும் சிறு பூச்சி ஆகும்.

இந்த பூச்சி பூவிலிருந்து தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கும்.

நாட்டுக்கோழி அடை வைக்கும் போது பேன்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்.

கோழியை அடை வைப்பதற்கு முன்பு வசம்பை அரைத்து பூசி விடுவதன் மூலம் பேன் வருவதை தடுக்கலாம்.

பூண்டுஅரைத்து தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரில் கோழிகளை முக்கி எடுத்து அடை வைக்கலாம்.

அதிக பேன் கள் இருக்கும் சமயத்தில் எருக்க இலைகளை அடையை சுற்றி பரப்பி வைத்தால் அந்த இலையின் மீது இருக்கும் பால் போன்ற தன்மையில் பேன் ஒட்டிக்கொள்ளும். தினமும் இலை யை மாற்றவேண்டும். இதன் மூலமும் பேன் வருவதை தடுக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories