இந்தக் கீரையை சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனையே வராது!

கீரைகள் எல்லாமே உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன. அதிலும் அரை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அரை கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது இதில்

அரை கீரை பயன்கள் (Benefits of spinach)
அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது.
அரை கீரை கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து உறுப்பானது பலமாகும் மற்றும்

அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். பின்னாளில் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு உறுப்பு நன்றாக வேலை செய்யும். மேலும் சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories