இந்த உணவுகளை மறுபடியும் சூடுபடுத்தினால் விஷமாக மாறும்

 

எப்போதுமே அன்றைக்குத் தேவையான உணவை அப்போதே, நம் தேவைக்கு ஏற்ப சமைத்துச் சாப்பிடுவதுதான் என்றும் சிறந்தது. அதைவிட்டுவிட்டு, அதிகமாக சமைத்துவிட்டு, எஞ்சிய உணவை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். அவ்வாறு எந்தெந்த உணவுகளை சூடாக்கக்கூடும். ஏன் மறுபடியும் சூடாக்கக்கூடாது என்கிறக் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா? இதோ அதற்கான பதில்கள்.

பழைய சாதம்
பழைய சாதத்தை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. சமைக்காத அரிசியில் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை உணவில் விஷத்தன்மையை கலக்கும் இயல்புடையவை. மீண்டும் சுடவைக்கப்பட்டால் இந்த பாக்டீரியாக்கள்அவை பன்மடங்காகப் பெருகின்றன.

முட்டை
முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் புரத சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

சிக்கன்
பழைய சிக்கன் உணவை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதிக புரதச்சத்து இருப்பதால், சிக்கனை மீண்டும் சூடாக்குவது பலவகையில் நமக்கு செரிமானம் தொடர்பானச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உறுதி மற்றும்

கீரை
பழைய கீரையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து, அதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறி எனலாம். அத்தகைய சூழ்நிலையில், உருளைக்கிழங்கு சேர்த்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டு சூடாக்குவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுவதோடு, இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. இவற்றை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்துவது, நமக்கு பலவித நோய்களைக் குறிப்பாக புற்றுநோய் வரை உண்டாக்கக்கூடும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories