இந்த Teaயை Try செய்யுங்க – அதிசயிக்க வைக்கும் பல நன்மைகள்

 

நீங்கள் அதிகம் அறிந்திடாத ஆயிரம் நன்மைகள் நம் சமையல் அறையில் உள்ள பூண்டில் நிறைந்துள்ளது. அந்த அத்தனை நன்மைகளையும் பூண்டு தேநீர் குடிப்பதன் மூலம் நாம் அப்படியேப் பெறவும் முடிகிறது என்பது உண்மை. பூண்டு தேநீரில் பல வித ஆச்சரியமான குணங்களும் அதிசய பலன்களும் உள்ளன. பூண்டு டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் உண்டாகின்றன.

தேநீர் என்பது நமது உடலுக்கு தெம்பையும், மனதுக்கு ஒருவிதப் புத்துணர்ச்சியும் அளிக்கும் பானமாகும். அதனால்தான் நாம் அனைவருமே தேநீர் குடிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறோம். அதிலும், தேநீரில் இஞ்சி, புதினா, எலுமிச்சம்பழம், லவங்கம் என பல வித பொருட்களை போட்டு மசாலா டீ அருந்துகிறோம். ஆனால், பூண்டு டீ பற்றித் தெரியுமா? இது உண்மைலேயே வித்தியாசமானது என்றார்.

7 அதிசய நன்மைகள்
பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பூண்டு தேநீரில் சிறிது இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கலாம். இப்படி செய்வதால், இதன் ஆரோக்கிய நன்மைகள் மேம்படும். தேநீர் சுவையும் அதிகரிக்கும் எனவே

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்
நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு தேநீர் மிகவும் நன்மை பயக்கும். இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் வளர்சிதை மாற்ற நிலையில் இது உதவுகிறது.

அழுக்குகள் Out
பூண்டு டீ சாப்பிட்டால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
இந்த தேநீர் உங்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு போட்ட தேநீர், இது எடை இழப்புக்கு உதவுகிறது எனவே

கொலஸ்ட்ராலுக்கு குட்பை
பூண்டு தேநீர் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதனை உட்கொள்வதால் இரத்த ஓட்டம் மேம்படும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

காய்ச்சலைக் குணப்படுத்தும்
பூண்டு தேநீர் சுவாச நோய்களில் இருந்து பாதுகாக்கும். குளிர் காலத்திலும் இதை சாப்பிட்டு வர காய்ச்சல் மற்றும் இருமல் குணமாகும் இதில்

நோய் எதிர்ப்புச் சக்தி
இந்த தேநீர் ஒரு சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் பானமாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

வீக்கம்
பூண்டு தேநீர் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கிறது.

தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து, நறுக்கிய பூண்டையும் அதில் சேர்க்கவும்.

இதனுடன், ஒரு ஸ்பூன் கருப்பு மிளகு சேர்த்து, பின்னர் இந்த தேநீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தேநீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories