உடல் எடையைக் குறைக்கப் பயன்படும் உலர் திராட்சை பற்றிய தகவல்கள்!

உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன.

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாக அனைத்து வகையான நட்ஸ்களையும் நீரில் ஊறவைத்து சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். மாறாக, உலர் திராட்சையை அப்படியேவும் சாப்பிடலாம்.

உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: (Benefits of Grapes)
கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் அதனை யார் வேண்டுமானாலும் தொடர்ந்து சாப்பிடலாம். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளும் குறையும்.
மலச்சிக்கல் இருப்பவர்கள் உலர் திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் திராட்சையை மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இதனை சாப்பிடும் பட்சத்தில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
உடல் சூடாகவே இருப்பதாக உணர்பவர்கள் அல்லது உடல் சூட்டைத் தணிக்க உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.
சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையுடன் தண்ணீர் அருந்த வேண்டும் எனவே
மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டப் பிரச்னைகளை சரிசெய்ய இது உதவும் இதில்

எலும்பு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் எலும்புகளின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள். நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு தீர்வாக இருக்கும்.
இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும் என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories