ஒரு நாளைக்கு 5 தான்- மீறினால் பலவித விளைவுகள் நேரிடும்!

பேரீச்சம்பழம் ஆரோகியமானது என்பது உலகம் அறிந்த உண்மை. இருப்பினும் அதைச் சாப்பிடுவதற்கும் அளவு இருக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், இத்தனை விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

பேரீச்சைப்பழம் (Dates)
உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பார்த்தால், தினமும் பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுங்கள். இழந்த சாத்துக்கள் கிடைக்கும் என்று கூறுவது வழக்கம்.
ஆனால் பேரீச்சம்பழத்தை அதிகமான சத்துக்கள் இருப்பது உண்மைதான் என்றபோதிலும், சில சூழ்நிலைகளின் உடல்நலத்திற்குக் கேடாகவும் மாறிவிடும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எச்சரிக்கை (Warning)
மேலும் அதிகப்படியான பேரீச்சம்பழங்களை உட்கொள்வதும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைக்கு 5 பேரீச்சம்பழங்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

தினமும் 5 மட்டும் (Only 5 daily)
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி6 மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பாலுடன் (Milk) சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். மேலும், இதில் இடம்பெற்றுள்ள நார்ச்சத்து, மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் ஒரு நாளைக்கு 5 பேரிச்சம்பழங்களுக்கு மேல் சாப்பிடுவது பல தீமைகளை எதிர்கொள்ள நேரிடும் இதில்

வயிற்று உபாதைகள் (Stomach upsets)
சந்தையில் கிடைக்கும் பேரீச்சம்பழங்களில், அவை நீண்ட நாட்கள் கெட்டுக் போகாமல் இருக்க சல்பைட் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சல்பைட் என்பது ஒரு வேதியியல் கலவையாகும். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தாக்காமல் பாதுகாக்கிறது என்றாலும், உங்களுக்கு சல்பைடு ஒவ்வாமை இருந்தால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வயிற்று வலி, வாயு பிரச்சனை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்ததுக்கள் நிறைந்திருப்பதும், சில சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்கும்.

ஹைபர்கேமியா (Hyperchemia)
பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே இதை அதிக அளவில் சாப்பிடுவதால், உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்கிறது. இந்த நிலை ஹைபர்கேமியா என்று அழைக்கப்படுகிறது. இது குமட்டல், மயக்கம், தசை பலவீனம்-கூச்ச உணர்வு மற்றும் வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா (Asthma)
ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் அந்த பிரச்சனை அதிகரிக்கலாம். அதனால் ஆஸ்துமா நோயாளிகள் பேரீச்சம்பழம் உட்கொள்ளும் போது எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என்றார்.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம்
பேரீச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பானது. அதனால், அதனை அதிகமாக உட்கொண்டால், அது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையை அதிகரிக்கும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories