தானியங்களில் அதிக அளவு கம்பில் தான் 11.8 சதவீதம் புரோட்டீன் உள்ளது .ஆரோக்கியமான தோலிற்கும் கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண் வயிற்றுப்புண் வாய்ப்புண் குணமாகும்.
உடல் பலம் பெற கம்பு மிகச் சிறந்த உணவாகும் .அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அடையும்.
கம்பு உணவுகள் இதயத்தை வலுவாக்கும். அதோடு நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும் மேலும் இரத்தத்தை சுத்தமாக்கும்.