சர்க்கரை நோயை விரட்ட இந்த தேநீரை தினமும் அருந்துங்க!

முருங்கைக்காயில் (Drumstick) அளவற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. முட்டைக்கு நிகரான புரதச்சத்தும் இதில் உள்ளது. கால்சியம், விட்டமின் C-யும் இதில் நிறைவாக உள்ளன.

மருத்துவ குணங்கள் (Medicinal benefits)
வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தால் போதும் அந்த வீட்டில் நோயே வராது என பெரியவர்கள் சொல்வதுண்டு. அதற்குக் காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் தான். அதன் இலை, காய் , பூ , பிசின் என அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்து தருகின்றன.

அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் (Diabetes) சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முருங்கைக்காய் தேநீர் மிகவும் உதவியாக இருக்கும். சரி வாங்க முருங்கை டீ எப்படி போடுவது குறித்து பார்க்கலாம்..

செய்முறை:-
முருங்கைக்காய்களை துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். முருங்கைக்காய் சுருங்கி அதன் சாறு நன்கு இறங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி கொள்ளுங்கள். பின் அந்த நீரை பருகுங்கள் மற்றும்

 

நன்மைகள் (Uses)
இதில் விட்டமின் A சத்து நிறைவாக உள்ளதால் கண் பார்வைக்கு நல்லது. முருங்கைக்காயில் இரும்புச் சத்து, உயிர்ச்சத்து, கனிமங்கள் இருப்பது உடலுக்கு நோய் சக்தி (Immunity) ஆற்றலை அதிகரிக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் முருங்கைக்காய் உதவுகிறது. இது நச்சு நீக்கியாகவும் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories