பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சில நோய்கள்!

பால்மனம் மாறாப் பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது இளம் தாய்மார்களுக்கு தற்போது சவாலாகவே (Tough Task) உள்ளது.

ஆயிரம் சிக்கல் (A thousand problems)
பட்டப்படிப்பு, படிப்புக்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என அடுத்தடுத்து வாழ்வில் எல்லையைத் தொட்டுவிட்ட இளம் பெண்கள் பலரும், புரியாமல் தவிர்த்து நிற்கும் இடம் என்றால் அது குழந்தை வளர்ப்புதான்.

அதிலும் பச்சிளங்குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது என்பது இயலாத ஒன்றாக இருக்கும். குழந்தை எதற்காக அழுகிறது?என்பதை அறிந்து கொள்வதில், ஆயிரம் சிக்கல் ஏற்படும்.

தனிக்குடித்தனம் (Monogamy)
மாமியார், பாட்டி, என மூத்தோர் வீட்டில் இருந்தார்கள் என்றால், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது மிக மிக சுலபம்.

ஆனால் மார்டன் உலகில் பெரும்பாலும் தனிக்குடித்தனம் என்றத் தனித் தீவில் மையம்கொண்டதால், குழந்தை வளர்ப்பில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறு அவதிப்படும் இளம் தாய்மாரா நீங்கள்? அப்படியானால், இந்தத் தகவல் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

காய்ச்சல் (Fever)
குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும்.

வீறிட்டு அழும்.

திடீரென்று தன் தாயைச் சேர்த்து அணைத்துக்கொள்ளும்.

இலேசாக இருமிக்கொண்டே இருக்கும்.

பால் குடிக்காது.

உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும்.

உமிழ்நீர் சூடாக இருக்கும்.

அடிக்கடி கொட்டாவி விடும்.

அக்கி உண்டானால்
குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும்.

அடிக்கடி அழும்.

காய்ச்சல் இருக்கும்.

உதடுகள் வறண்டு காணப்படும்.

வயிற்றுப் பொருமல்

குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும்.

அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும்.

கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும்.

உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது மற்றும்

மலம் வெளியேறாது.

காமாலை
குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாகத் தோன்றும்.

பசியில்லாமல் இருக்கும்.

பால் குடிக்காது.

சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.

மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.

விக்கல்
மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும்.

குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும்.

திடீரென்று ஏப்பம் விடும் மற்றும்

நாக்கில் பாதிப்பு
உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும்.

சில சமயங்களில் புள்ளிப் புள்ளியாகப் புண்கள் காணப்படும்.

வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

தொண்டைப் பிடிப்பு
இலேசான ஜூரம் இருக்கும்.

குழந்தைக்கு எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும்.

காது பாதிப்பு
கையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும்.

தூக்கமிருக்காது.

பால் குடிக்காது.

கழுத்தில் பாதிப்பு

குடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும்.

பசி எடுக்காது.

காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாகக் காணப்படும்.

வயிற்றுவலி
குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது.

நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும்.

உடல் குளிர்ந்திருக்கும்.

முகம் வியர்த்துக் காணப்படும்.

இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது. இதில்

பலவகைகளில் கஷ்டப்பட்டுப் பெற்றக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டியது,தாயாரின் கடமை என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories