பப்பாளிப் பாலை பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் புண்கள் ஆறும்.
மேலும் பப்பாளி பாலை வாய்ப்புண் புண்கள் மேல் பூசி வர புண்கள் விரைவில் குணமாகும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் வலி குறையும் விஷம் இறங்கும்.
பப்பாளி விதைகளை அரைத்து அதை பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும் மேலும் முகம் அழகு பெறும்.